வெறும் 4 லட்சத்துக்கு புது காரா! 34 கிமீ மைலேஜ் தருது! டாக்ஸில போறதுக்கு பதில் பேசாம இதை சொந்தமா வாங்கீரலாம்!

வெறும் 4 லட்சத்துக்கு புது காரா! 34 கிமீ மைலேஜ் தருது! டாக்ஸில போறதுக்கு பதில் பேசாம இதை சொந்தமா வாங்கீரலாம்!
இதற்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) ஒரு உதாரணம். நடப்பு 2025ம் ஆண்டின் ஜனவரி-மே வரையிலான 5 மாதங்களில், மாருதி சுஸுகி நிறுவனம், இந்திய சந்தையில் 40,336 ஆல்டோ கே10 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது

**** AGNISIRAGU****

இந்திய வாடிக்கையாளர்கள் பொதுவாக மிகவும் குறைவான விலையில் (Price) கிடைக்கும் கார்களை வாங்குவதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கூடவே நல்ல மைலேஜ் (Mileage)தருகிறதா? என்பதையும் பார்ப்பார்கள். பெரும்பாலும் ஹேட்ச்பேக் ரக கார்கள்தான் (Hatchback Cars), வாடிக்கையாளர்களின் இந்த 2 எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்.

ஆனால் சமீப காலமாக இந்தியாவை சேர்ந்த கார் வாடிக்கையாளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மிகவும் குறைவான விலையில் கிடைக்கும், அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை, இந்திய சந்தையில் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது.

இதற்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) ஒரு உதாரணம். நடப்பு 2025ம் ஆண்டின் ஜனவரி-மே வரையிலான 5 மாதங்களில், மாருதி சுஸுகி நிறுவனம், இந்திய சந்தையில் 40,336 ஆல்டோ கே10 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 11,352 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதன் பின் வந்த பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை குறைந்து வெறும் 8,541 ஆக மாறியது. அதை தொடர்ந்து வந்த மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்து 9,867 ஆக மாறியது.

ஆனால் இதற்கு பிறகு, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை எண்ணிக்கை மீண்டும் சரிவை சந்திக்க தொடங்கியது. அதாவது ஏப்ரல் மாதத்தில் 5,606 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்களும், மே மாதத்தில் 4,970 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

****AGNISIRAGU****