ஏங்க.. கூமாப்பட்டி தெரியும்.. கடமக்குடி தெரியுமா?.. ஆனந்த் மஹிந்திராவே புகழ்ந்து தள்ளிய சொர்க்க பூமி

சென்னை: ஒரே ஒரு ரீல்ஸ் மூலமாக கூமாப்பட்டி என்ற கிராமம் வேர்ல்டு ஃபேமஸ் ஆனது எல்லோரும் அறிந்ததே. சமூகவலைதளங்களில் "ஏங்க கூமாபட்டிக்கு வாங்க" என இளைஞர் ஒருவர் ரீல்ஸ் போட்டது பயங்கர டிரெண்டானது. இதை நம்பி பலர் கூமாப்பட்டியை நோக்கி படையெடுத்து ஏமாந்து போய் வந்தனர். இந்நிலையில், கேரளாவில் உள்ள ஒரு அழகான கிராமம் குறித்த ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் தளப் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சிறிய கிராமம்தான் கூமாப்பட்டி.ஏங்க.. கூமாப்பட்டிக்கு வாங்க.. கவலையா இருக்கா கூமாப்பட்டிக்கு வாங்க. காதல் தோல்வியா கூமாப்பட்டிக்கு வாங்க என்று இளைஞர் ஒருவர் போட்ட ரீல்ஸ் செம வைரலானது. கூமாப்பட்டி தண்ணிய பாருங்க.. சர்பத் மாதிரி இருக்கும்.. 7அப் மாதிரி இருக்கும்! ஏங்க கூமாப்பட்டி தனி ஐலாண்டுங்க.. கல்யாணம் ஆகலையா கூமாபட்டிக்கு வாங்க! என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு கூமாப்பட்டி என்பது போல பிராண்டிங்
இதையடுத்து, கூமாப்பட்டியை பார்த்த ஆக வேண்டும் என்ற ஆசையில் பலரும் அந்த ஊர் நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். கோவிலாறு அணை, பிளவக்கல் பெரியாறு அணை ஆகிய அணைகளுக்கு முன்பே கூமாப்பட்டி இருக்கிறது. இந்த ஊருக்கும் பிளவக்கல் அணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டுக்கும் இடையிலான தூரம் 10 கி.மீ. ஆகும். பிளவக்கல் அணையில் வீடியோ எடுத்த அந்த இளைஞர் கூமாப்பட்டிக்கு வாங்க என அழைத்திருக்கிறார்.
இந்த ரீல்ஸை நம்பி ஏராளமானோர் அங்கு படையெடுத்துச் சென்ற நிலையில், வீடியோவில் போட்டது போல் கூமாபட்டியை சுற்றி எந்த நீர் நிலையும் இல்லை. இருந்த ஒரு குளமும் வாய்க்காலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பலரும் சோகமடைந்தனர். ரீல்ஸ்களை நம்பி யாரும் இந்தப் பகுதிக்கு வரக் கூடாது. தடையை மீறி உள்ளே நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பணித் துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கேரளத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் குறித்து பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத் தலைவருான ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
ஆனந்த் மஹிந்திராவின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் கடமக்குடி குறித்து கூகுளில் தேடத் தொடங்கியுள்ளனர். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தீவுகளின் குழுவில் அமைந்துள்ளது தான் கடமக்குடி. இந்த கிராமத்தைச் சுற்றிலும் பச்சைப் போர்வை போர்த்தியது போன்று நெல் வயல்கள் நிறைந்திருக்கும்.
காண்போரைக் கட்டிப் போட வைக்கும் வகையில் நெல் வயல்கள், கிராமப்புற சூழல் என உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. கூமாப்பட்டி போல தற்போது கடமக்குடியும் டிரெண்டாகி வருகிறது.