மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !

கட்டட வேலை பாக்குறவங்க, ட்ரை சைக்கிள் ஓட்டறவங்க, தூய்மை பணியாளர்கள், ஊருக்கு போறோம் ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்னு நெனைக்கிறவங்க. எல்லாரும் அஞ்சு ரூபாயில் வயிறு நிறைந்து போறாங்க, என்று மெச்ச வைக்கும் செயல் மதுரையில் துவங்கப்பட்டிருக்கு.
மதுரை திருமங்கலம் பெரியார் சிலை பகுதியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து "crowd funding" முறையில் பொன்னி அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு அல்லது பொறியல் என தரமான உணவை உழைக்கும் மக்களுக்கு 5 ரூபாய்க்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை துவங்கியுள்ளனர். இந்த விடயம் மதுரையில் வரவேற்பை பெற்றுள்ளது.
முகப்புசெய்திகள்மதுரைமதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
பொன்னி அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு அல்லது பொறியல் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. எங்கு, எப்படி, என்ன நோக்கத்திற்காக கொடுக்குறாங்க தெரியுமா? - முழுமையாக கட்டுரை வாசிக்கவும்.
Madurai Lunch is being served for Rs 5 in thiumangalam Social activists launch new initiative hotel tnn மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
மதுரையில் 5 ரூபாய் உணவு திட்டம்
கட்டட வேலை பாக்குறவங்க, ட்ரை சைக்கிள் ஓட்டறவங்க, தூய்மை பணியாளர்கள், ஊருக்கு போறோம் ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்னு நெனைக்கிறவங்க. எல்லாரும் அஞ்சு ரூபாயில் வயிறு நிறைந்து போறாங்க, என்று மெச்ச வைக்கும் செயல் மதுரையில் துவங்கப்பட்டிருக்கு.
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
மதுரை திருமங்கலம் பெரியார் சிலை பகுதியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து "crowd funding" முறையில் பொன்னி அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு அல்லது பொறியல் என தரமான உணவை உழைக்கும் மக்களுக்கு 5 ரூபாய்க்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை துவங்கியுள்ளனர். இந்த விடயம் மதுரையில் வரவேற்பை பெற்றுள்ளது.
5 ரூபாய்க்கு உணவு யோசனை எப்படி வந்தது ?
இது குறித்து சமூக ஆர்வலரும், யூடியூபருமான புஹாரி ராஜா கூறுகையில் ”என்னோட யூடியூப் சேனலுக்காக நிறைய பயணம் போவேன். நான் சந்திக்கிற மனிதர்கள் எல்லோருமே தினம் தினம் நாம கடந்து போற சாதாரண எளிய மனிதர்கள் தான். காடு மலைன்னு தாண்டி போயி ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில உட்கார்ந்தா, குடிக்க கூழோ மோரோ குடுத்து தான் வரவேற்பாங்க. தான் சாப்பிட எதுவும் இல்லாட்டியும் வீட்டுக்கு ஒருத்தன் வந்துருக்கானே, அவனுக்கு பசி எடுக்கும்ணு எனக்கு சோறு போட்ட ஆட்கள் அதிகம்.
இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லோருமே தன்னோட வயித்துப்பிழைப்புக்காக ஓரிடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு வேலைக்காக போறப்போ நல்ல சாப்பாடு சாப்பிட முடியிறது இல்ல, தினக்கூலிகளா போற பாதி பேரோட மதிய சாப்பாடு ஒரு டீயோடயும் ரெண்டு வடையோடயும் முடிஞ்சு போயிடுது. இந்த விஷயங்கள எல்லாம் நண்பர்கள் கிட்ட சொன்னப்போ, முதற்கட்டமா எல்லோரும் சேர்ந்து சின்ன அளவுல பங்கெடுத்து ஆரம்பிக்கலாம், துணைக்கு நம்ம யூடியூப் சேனல் சப்ஸ்கிரைபர்கள் கிட்டயும் கேட்கலாம்னு தான் ஆரம்பிச்சோம்.
இப்படி ஒரு ஐடியாவ வீடியோல சொன்னப்போ நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. இது ஐடியாவா யோசிச்சா, சாதாரணமா தெரியும் ஆனா இதை செயல்படுத்த கூட ஒரு துணை தேவைப்பட்டுச்சு. அப்போ திருமங்கலத்துல உள்ள "அன்பு சூழ்" உலகு அறக்கட்டளையோட தன்னார்வலர் உறுதுணையோட திருமங்கலத்துல ஆரம்பிக்க முடிவு பண்ணோம் என நெகிழ்வுடன் தெரிவித்தார்.
ஏன் இலவசமாக சாப்பாடு கொடுக்கக் கூடாது?
இப்போதைக்கு தினம் 50 நபர்களுக்கான சாப்பாடு மட்டும் ஏற்பாடு பண்றோம்., ஆனா சாப்பாடு வந்த அரை மணி நேரத்துல மொத்த சாப்பாடும் தீர்ந்துபோயிரும். அதுக்கு அப்றம் கேட்டு வந்து திரும்பி போறவங்கள பார்க்குறப்போ கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஏன் அஞ்சு ரூபாய்க்கு குடுக்குறீங்க இலவசமாவே குடுக்கலாம்னு சிலர் கேட்டாங்க,? அஞ்சு ரூபாய்ங்கிறது சாதாரணம் கிடையாது, ஒரு தனிமனுஷனோட உழைப்புன்னு அதுக்கான சுயமரியாதை இருக்கு.
தனக்கு யாரும் இலவசமா சோறு போடவேணாம், எந்த சொந்த காசுல நான் சாப்பிடுறேங்கிற வைராக்கியம் எல்லார் கிட்டயும் இருக்கு. அந்த சுயமரியாதைக்காக தான் இதை இலவசமா குடுக்க கூடாதுன்னு அஞ்சு ரூபாய் விலை நிர்ணயம் பண்ணிருக்கோம்., இது எல்லாருக்கும் போயி சேரணும்னு தான் ஒரு நபருக்கு ஒரு சாப்பாடுன்னு முடிவெடுத்துருக்கோம். சில நேரங்களில பொருளாதார பின்புலம் அதிகம் இருக்க ஆட்கள் கூட வருவாங்க, ஆனாலும் இதுக்கு நாங்களும் சப்போர்ட் பண்ணனும்னு சொல்றத கேட்குறப்ப இந்த சமூகம் நம்மள கைவிடாதுன்னு நம்பிக்கை வருது என்ன நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எங்களோட இந்த முன்னெடுப்ப பார்த்துட்டு நிறைய பேரு அவங்க அவங்க பகுதிகள்ள ஆரம்பிக்க கேட்குறாங்க, கண்டிப்பா எங்களுக்கும் அந்த ஆசை இருக்கு, ஆனா அதுக்கான நிதியையும் சக்தியையும் காலம் தான் குடுக்கணும்..” என்றார் சமூக முன்னேற்ற ஏக்கத்தோடு