பழைய கம்ப்யூட்டர், லேப்டாப், கிரைண்டர், டேபிள், சேர், இன்னும் பல... அப்புறப்படுத்த மனதில்லையா?

பழைய கம்ப்யூட்டர், லேப்டாப், கிரைண்டர், டேபிள், சேர், இன்னும் பல... அப்புறப்படுத்த மனதில்லையா?
எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து எதை யும் செய்யவில்லை. ஆனாலும், இதுபோன்ற சின்னச்சின்ன சந்தோஷங்கள், தொடர்ந்து ஓடுவதற்கான ஊக்கத்தைக் கொடுப்பதையும் மறுப்பதற்கில்லை

வருமானம் ஈட்டும் பல்வேறு பணிகள்... உயர் பதவிகள்... அனைத்தையும் உதறிவிட்டு, சிதறிக் கிடக்கும் குப்பைகள் மீது கவனத்தைச் செலுத்தி, ஜெயித்துக் காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜனனி வெங்கடேஷ். தனிநபரில் தொடங்கும் மாற்றம்தான் ஆரோக்கியமான சூழலியலுக்கு அச்சாரம் என்பதை திடமாக நம்பிய ஜனனி உருவாக்கியதுதான் ‘ரோகா’... அதாவது, ‘ரெசிடன்ட்ஸ் ஆஃப் கஸ்தூரிபா நகர் அசோசியேஷன்’. இந்த அமைப்பின் மூலம் திடக்கழிவு மேலாண்மை, பயோகேஸ், உலர் கழிவு என சூழலியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஜனனியை சந்தித்தோம்.

‘`சாதாரணமாக நம் வீடுகளில் அரை கிலோ, ஒரு கிலோ அளவிலான குப்பைகள் சேரும். அவை தெரு முனையில் உள்ள குப்பைத் தொட்டிக்கு வந்து சேரும்போது நூற்றுக்கணக்கான கிலோக்களாக மாறும். அடுத்து பெருங்குடி, கொடுங்கையூர் போன்ற குப்பைக் கிடங்கு களுக்குப் போய்ச் சேரும்போது டன் கணக்கில் பெருகி யிருக்கும். மட்கும் குப்பை , மட்காத குப்பைகளைப் பிரித்து அப்புறப்படுத்தும்படி, அரசு கூவிக்கூவிச் சொன்னாலும், அதை மக்கள் மதிப்பதில்லை. தெருக்கள் எங்கும் சிதறிக்கிடக்கும் குப்பைகளின் காட்சிகள், என்னை சங்கடப்படுத்த, குப்பைகளை தரம் பிரித்து, வாய்ப்புள்ள குப்பைகளை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியுமா என யோசித்தேன். திடக்கழிவு மேலாண்மை குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தினேன். ஆரம்பத்தில் அலட்சியமே பதிலாகக் கிடைத்தது. ஆனாலும், நான் துவண்டு போகவில்லை. ஒரே மாதிரி எண்ணம் கொண்ட தரன், சரண்யா, ஸ்வாதி என நண்பர்களுடன் இணைந்து, ரெசிடன்ட்ஸ் ஆஃப் கஸ்தூரிபா நகர் அசோசியேஷனை ஆரம்பித்தோம்.

எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து எதை யும் செய்யவில்லை. ஆனாலும், இதுபோன்ற சின்னச்சின்ன சந்தோஷங்கள், தொடர்ந்து ஓடுவதற்கான ஊக்கத்தைக் கொடுப்பதையும் மறுப்பதற்கில்லை.....