கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்!

டாக்டர்.ஏபிஜே.அப்துல்கலாம் ஐயா கூறிய "கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்" என்ற வரிகளால் என் மனதில் ஏற்பட்ட மாற்றம்!
"அவன் இன்றி அணுவும் அசையாது" என்பது கடவுளை பற்றி கூறுவது ஆனால் நான் கூறுவது உண்மையில் "அவர் இன்றி அணுவும் அசையாது" என்பதைப் போல் அவருடைய அணு ஆயுதப் படைப்புகள் இன்றும் பலன் அளிக்கின்றன..
கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம் என்பது வரிகள் அல்ல ஒவ்வொரு முன்னேறிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அது ஒரு லட்சிய வார்த்தை அந்த லட்சிய வார்த்தையை நினைக்கும் போதெல்லாம் எங்கோ நான் படித்த ஒரு கவிதை என் மனதுக்குள் வந்து செல்லும் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் இதோ!
இளைஞனே!
" சுயநலத்தை சூடு போடு!
பொதுநலத்தைப் போற்றிப் பாடு!"
"பயத்துக்கு பட்டினி போடு!
தைரியத்திற்கு தீனி போடு!"
"முடியுமா என்ற கேள்விக்கு விடை கொடு!
முடியும் என்ற பதிலுக்கு அழைப்பு கொடு!"
" ஏழ்மையை எரித்துவிடு!
ஏழைக்கு உதவிடு!"
" அன்பை வளர்த்திடு!
அறனை பெருக்கிடு!"
கனவு காண்பதை உன் குறிக்கோளாகக் கொண்டு விடு!
- இப்படிக்கு உங்கள்
அனிதா மாரிக்குமார் அக்னி சிறகு.