பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி விடுவிப்பு

வாராணசி: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 20-வது தணையாக 9.7 கோடி விவசாயிகளுக்கு நேற்று சுமார் ரூ.20,500 கோடி விடுவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இதனை விடுவித்தார்.
கடந்த 2019-ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.6,000 செலுத்தப்படுகிறது. இது தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகளில் விவசாயிகளுக்கு சுமார் ரூ.3,69,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தின் 20-வது தவணையாக 9.7 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ.20,500 கோடி நேற்று விடுவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான, உ.பி.யின் வாராணசியில் நேற்று பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து இந்த தொகையை அவர் விடுவித்தார்.
இ-கேஒய்சி கட்டாயம்இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு இ-கேஒய்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பொது சேவை மையங்களில் இதனை விவசாயிகள் சமர்ப்பிக்கலாம் என வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.