செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் செப்​டம்​பர் 9-ம் தேதி நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

நாட்​டின் 14-வது குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கரின் பதவிக் காலம் 2027 ஆகஸ்ட் வரை இருந்த நிலை​யில், உடல்​நிலையை காரணம் காட்​டி, அவர் தனது பதவியை கடந்த மாதம் 21-ம் தேதி ராஜி​னாமா செய்​தார்.

முழு​மை​யான 5 ஆண்டு பதவி காலத்​துக்​குள், அந்த பதவி காலி​யாக நேரிட்​டால்,உடனடி​யாக தேர்​தல் நடத்​தப்பட வேண்​டும் என்​ப​தால், அதற்கான நடை​முறை​களை தேர்​தல் ஆணை​யம் கடந்த வாரம் தொடங்​கியது. இதை தொடர்ந்​து, மக்​களவை, மாநிலங்​களவை எம்​.பி.க்​களை உள்​ளடக்​கிய வாக்​காளர் பட்​டியல் இறுதி செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தல் அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வெளியிட்டது. அதன்​படி, தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் வரும் 7-ம் தேதி தொடங்​குகின்றன. அன்றே வேட்​புமனு தாக்​கல் தொடங்​கு​கிறது. மனுக்​களை தாக்​கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள். மனுக்​கள் பரிசீலனை 22-ம் தேதி நடை​பெறும். மனுக்​களை வாபஸ் பெறும் அவகாசம் 25-ம் தேதி முடிவடைகிறது.

போட்டி இருக்​கும்​பட்​சத்​தில், செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும். நாடாளு​மன்ற வளாகத்​தில் உள்ள அறை​யில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்​குப்​ப​திவு நடத்​தப்​படும். வாக்​குப்​ப​திவு முடிந்​ததும் உடனடி​யாக வாக்​கு​கள் எண்​ணப்​பட்​டு, சில மணி நேரத்​துக்​குள் முடிவு வெளி​யாகும்.

ஆளும் கட்சி சார்​பில் பாஜக மூத்த தலை​வர்​களில் ஒரு​வர் களமிறக்​கப்​படு​வார் என்று தெரிகிறது. இண்​டியா கூட்​டணி சார்​பிலும் வேட்​பாளர் நிறுத்​தப்​படு​வார் என்று கூறப்படு​கிறது. தற்​போது இரு அவை​களை​யும் சேர்த்து எம்​.பி.க்​களின் எண்​ணிக்கை 782 ஆக உள்​ளது. இவர்​கள் அனை​வரும் வாக்​களிக்​கும் நிலை​யில், குறைந்​த​பட்​சம் 391 வாக்​கு​களைபெறும் வேட்​பாளர் வெற்றி பெறு​வார்.

பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்​டிஏ), மக்​களவை​யில் 293 பேரின் ஆதர​வும், மாநிலங்​களவை​யில் 129 பேரின் ஆதர​வும் உள்​ளது. நியமன எம்​.பி.க்​களும் ஆதரவு அளித்​தால், என்​டிஏவுக்கு மொத்​தம் 422 உறுப்​பினர்​களின் ஆதரவு கிடைக்​கும்.எனவே, பாஜக வேட்​பாளர் வெற்று பெறு​வது எளி​தாக இருக்​கும் என்று அரசி​யல் நோக்​கர்​கள் தெரிவிக்​கின்​றனர்​. புதி​தாக தேர்​ந்​தெடுக்​கப்​படும்​ குடியரசு துணைத் தலை​வர்​ 5 ஆண்​டு காலம் இந்த ​ப​த​வி​யில்​ இருப்​​பார்​.