வேளாண் சட்​டங்களை எதிர்த்ததால் அருண் ஜெட்லி மிரட்டினாரா? - ராகுல் காந்திக்கு மகன் ரோஹன் ஜெட்லி கண்டனம்

வேளாண் சட்​டங்களை எதிர்த்ததால் அருண் ஜெட்லி மிரட்டினாரா? - ராகுல் காந்திக்கு மகன் ரோஹன் ஜெட்லி கண்டனம்
வேளாண் சட்​டங்களை எதிர்த்ததால் அருண் ஜெட்லி மிரட்டினாரா? - ராகுல் காந்திக்கு மகன் ரோஹன் ஜெட்லி கண்டனம்

புதுடெல்லி: ‘‘வேளாண் சட்​டங்​கள் தொடர்​பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்​டிய​தாக ராகுல் காந்தி கூறு​வது தரமற்ற சிந்​தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

காங்​கிரஸ் சார்​பில் சட்​டப் பிரிவு ஆண்டு மாநாடு சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி பேசி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: புதிய வேளாண் சட்​டங்​களை மத்​திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமை​யாக எதிர்த்​தேன். அப்​போது நடந்த சம்​பவம் எனக்கு இப்​போதும் நினை​வில் இருக்​கிறது. அப்​போது மத்​திய நிதி அமைச்​ச​ராக இருந்த அருண் ஜெட்லி என்னை மிரட்​டி​னார். வேளாண் சட்​டங்​களை தொடர்ந்து எதிர்த்​தாலோ, மத்​திய அரசை எதிர்த்து பேசி​னாலோ, என் மீது நடவடிக்கை எடுப்​போம் என்று அருண் ஜெட்லி மிரட்​டி​னார்.

அதற்​கு, ‘‘நீங்​கள் யாரிடம் பேசுகிறீர்​கள் என்று உங்​களுக்கு தெரிய​வில்​லை. நாங்​கள் காங்​கிரஸ்​காரர்​கள். கோழைகள் அல்ல. நாங்​கள் வளைந்து கொடுக்க மாட்​டோம். பிரிட்​டிஷ்​காரர்​களாலேயே எங்​களை வளைய வைக்க முடிய​வில்​லை’’ என்று பதில் அளித்​தேன். இவ்​வாறு ராகுல் காந்தி பேசி​னார்.

இதற்கு அருண் ஜெட்​லி​யின் மகன் ரோஹன் ஜெட்லி நேற்று கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார். இதுகுறித்து ரோஹன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இறந்த எனது தந்தை அருண் ஜெட்​லி​யின் நினை​வு​களை அரசி​ய​லாக்க நினைக்​கிறார் ராகுல் காந்​தி. என் தந்தை ராகுலை மிரட்​டிய​தாக கூறுகிறார். அவருக்கு ஒன்றை நினை​வுப்​படுத்த விரும்​பு​கிறேன். என் தந்தை அருண் ஜெட்லி இறந்​தது 2019-ம் ஆண்​டு.

ஆனால், வேளாண் சட்​டங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது 2020-ம் ஆண்​டு. இந்த உண்மை கூட தெரி​யாமல், தவறான கருத்​துகளை கூறுகிறார் ராகுல் காந்​தி. அவர் கூறிய கருத்​துகள் அனைத்​தும் பொய், தரமற்ற பேச்​சு. என் தந்தை யாரை​யும் மிரட்​டும் குணம் கொண்​ட​வரில்​லை. எந்த சூழ்​நிலை​யிலும் ஜனநாயக முறைப்​படி செயல்​பட்​ட​வர். ஒரு​மித்த கருத்தை எட்ட வேண்​டும் என்​ப​தில் அவர் முழு நம்​பிக்கை கொண்​டவர்.

அரசி​யலில் எப்​போதெல்​லாம் சர்ச்​சைகள் எழுந்​தனவோ, அப்​போதெல்​லாம் அவர் விவாதத்​துக்கு முக்​கி​யத்​து​வம் அளித்​தார். பேச்​சு​வார்த்தை நடத்தி ஒரு​மித்த கருத்​தின் அடிப்​படை​யில் தீர்வு காண நினைத்​தார். ஏற்​கெனவே, பாது​காப்​புத் துறை அமைச்​ச​ராக இருந்த மனோகர் பாரிக்​கரின் கடைசி காலத்​தில் அவரைப் பற்றி தவறான கருத்​துகளை கூறி அரசி​ய​லாக்​கி​னார் ராகுல் காந்​தி. இறந்து போன அவர்​களின் ஆத்மா சாந்தி அடையட்​டும். எனவே, பொது வாழ்க்​கை​யில் ஈடு​பட்டு இறந்த போன தலை​வர்​களைப் பற்றி பேசும் போது ராகுல் காந்தி எச்​சரிக்​கை​யாக பேச வேண்​டும். நம்​முடன் தற்​போது இல்​லாதவர்​களைப் பற்றி பேசும் போது ராகுல்​ காந்​தி நாகரி​க​மாக பேசி​னால்​ ​நான்​ வரவேற்​பேன்​. இவ்வாறு ரோஹன் ஜெட்லி கூறினார்.