இந்தியப் பொருட்கள் மீதான டிரம்பின் வரி விதிப்பால் எந்தத் துறைக்கு அதிக பாதிப்பு?

இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
டிரம்பின் புதிய வரி விதிப்பால் எந்தத் துறைக்கு பாதிப்பு?
இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் 25% வரி விதிப்பால் வேளாண்மை, ஜவுளி, மின்னணு, ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்களில் 44% இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. வரிவிதிப்பால் நாட்டில் செல்போன் உற்பத்தித் துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.