சோனியா தலைமையில் 3-வது நாளாக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

சோனியா தலைமையில் 3-வது நாளாக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று போராட்டம் நடத்தினர்

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் விரை​வில் நடை​பெறவுள்ள நிலை​யில், அங்கு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்தம் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இந்த நடவடிக்​கையை திரும்ப பெறக் கோரி​யும், இது குறித்து நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் விவா​திக்க கோரி​யும் இண்டியா கூட்​டணி எம்​.பி.க்​கள் நாடாளு​மன்ற வளாகத்​தின் நுழை​வா​யில் படிக்​கட்​டில் நின்று கடந்த 3 நாட்​களாக போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

மூன்​றாவது நாளாக நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, காங்​கிரஸ் பொதுச் செயலாளர்​கள் பிரி​யங்கா காந்​தி, கே.சி.வேணுகோ​பால், திமுக எம்​.பி ஆ.ராசா மற்​றும் இண்​டியா கூட்​டணி கட்சி எம்​.பி.க்​கள் பலர் கலந்து கொண்​டனர். ஜனநாயகத்தை காப்​பாற்​றுங்​கள், வாக்​காளர்​கள் நீக்​கத்தை தடுத்து நிறுத்​துங்​கள் என அவர்​கள்​ கோஷம்​ எழுப்​பினர்​.