வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ள அரசு ஊழியர்கள் 30 நாள் விடுப்பு எடுக்கலாம்.. மத்திய அரசு அதிரடி

வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ள அரசு ஊழியர்கள் 30 நாள் விடுப்பு எடுக்கலாம்.. மத்திய அரசு அதிரடி
வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ள அரசு ஊழியர்கள் 30 நாள் விடுப்பு எடுக்கலாம்..

டெல்லி: வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ள அரசு ஊழியர்கள் 30 நாள் விடுப்பு எடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில், அரசு ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு எடுக்க ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், "மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்வது உட்பட, தனிப்பட்ட காரணங்களுக்காக 30 நாட்கள் வரை விடுப்பு எடுக்க முடியும்" என்று கூறினார்..

மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்வது உட்பட, தனிப்பட்ட காரணங்களுக்காக 30 நாட்கள் வரை விடுப்பு எடுக்க முடியும் என்று மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார்...

இது தொடர்பாக ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அரசு ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு எடுக்க ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது...

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், "மத்திய குடிமைப் பணிகள் (விடுப்பு) விதிகள், 1972-ன் படி, மத்திய அரசு ஊழியர் ஒருவர் ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, 20 நாட்கள் அரை சம்பள விடுப்பு, 8 நாட்கள் சாதாரண விடுப்பு மற்றும் இரண்டு நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்கலாம். இந்த விடுப்புகளை வயதான பெற்றோரை கவனிப்பது உட்பட எந்தவொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.