ஸ்விக்கி, சோமேட்டோவிற்கு செக்.. உணவு டெலிவரிக்கு புதிய செயலி.. நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள்

ஸ்விக்கி, சோமேட்டோவிற்கு செக்.. உணவு டெலிவரிக்கு புதிய செயலி.. நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள்
உணவு டெலிவரிக்கு இனி ZAAROZ - என்ற புதிய செயலியை தொடங்குவதாக அறிவித்துள்ளனர்

நாமக்கல்: உணவு டெலிவரிக்கு செக் வைக்கும் விதமாக அதிரடி முடிவு ஒன்றை நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் எடுத்துள்ளனர். அதாவது, உணவு டெலிவரிக்கு இனி ZAAROZ - என்ற புதிய செயலியை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இனி ஆன்லைன் உணவு விநியோகத்திற்கு இந்த செயலியை பயன்படுத்தப் போவதாக உணவகங்கள் அறிவித்துள்ளன

ஒரே மாதிரியான கமிஷன் தொகை வசூலிப்பது இல்லை, கூடுதல் கமிஷன் தொகை என பல்வேறு காரணங்களை முன்வைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்து இருந்தனர். குறிப்பாக, 10,000 ரூபாய் மதிப்புள்ள உணவு வியாபாரத்தில், 4,000 ரூபாய் வரை கமிஷனாக பிடித்துக் கொள்வதாக குற்றம்சாட்டியிருந்தனர்

ஆன்லைனில் உணவு ஆர்டர்

பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவிடம் இருந்து உணவு ஆர்டர்கள் எடுப்பது இல்லை என்று நாமக்கல் ஹோட்டல் சங்க உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர். ஒரே மாதிரியான கமிஷன் தொகை வசூலிப்பது இல்லை, கூடுதல் கமிஷன் தொகை என பல்வேறு காரணங்களை முன்வைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்து இருந்தனர்.