உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது

1980க்கும் முன் பிறந்தவர்களுக்கு தான் தெரியும்... தண்ணீரின் சிக்கனத்தை பற்றி...
ஒரு ஊருக்கு ஒன்று இல்லையென்றால் இரண்டு #கிணறுகள் மட்டும் தான் இருக்கும்... வீடு எங்க இருந்தாலும் இந்த கிணற்றில் வந்து தான் தண்ணீர் இறைக்க வேண்டும்... இடுப்பில் ஒரு குடமும் தலையில் ஒரு குடமும் கையில வாளியைம் வைத்துக் கொண்டு பெண்கள் கம்பீரமாக நடந்து செல்வார்கள்... ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்..
சில நேரங்களில் கயிறு அறுந்து வாளி தண்ணிக்குள்ளே விழுந்து விடும்
அதை எடுப்பதற்காக ஒருவர் வீட்டில் "பாதாள கரண்டி" என்று சொல்வார்கள் அதை வாங்கி கயிறு கட்டி கிணற்றுக்குள்ளே விட்டால் பல வாளிகள் சிக்கும்..
ஒரு நாளைக்கு ஆறு குடம் தண்ணி தான் வீட்டில் பயன்படுத்துவார்கள் அப்போது உள்ள பெண்கள்....
வீட்டில் உள்ள நபர்களின் துணிமணிகளை குளத்தில் போய் துவைப்பார்கள். குளிப்பதும் குளத்தில்தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை அப்போது தண்ணி நல்லா இருக்கும் ஆனால் இப்போது சாக்கடை கலந்து தான் இருக்கிறது எல்லா ஊர்களிலும்.,.. பெரும்பாலும் இப்போது யாரும் குளத்தில் துணி துவைப்பதுமில்லை குளிப்பதுமில்லை...
ஆண்கள் காலை கடனை முடிப்பதற்கு கண்மாய்க்கு சென்று விடுவார்கள்...
ஊர் வளர்ச்சி அடைந்தது ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நீர்த்தேக்க தொட்டியை கட்டி அதன் மூலம் ஒரு தெருவுக்கு இரண்டு மூன்று குழாய்களை வைத்தார்கள்.... அதன் மூலம் வீட்டுக்கு இருபது குடம் முப்பது குடம் தண்ணீர் கிடைத்தது தண்ணீரை தாராளமாக பயன்படுத்தினார்கள்...
20 குடம் 30 குடம் தண்ணீர் பத்தாது என்று ஒரு சில வீட்டில் போர்வெல் போட ஆரம்பித்தார்கள்.. ஒரு பேரலை மட்டும் வைத்து அவ்வப்போது தண்ணீரை நிரப்பி தண்ணீரை பயன்படுத்தினார்கள்..
அதற்குப் பிறகு வீட்டின் மாடியில் சின்டெக்ஸ் டேங்க் வைத்து நல்லி மூலமாக எந்த நேரமும் தண்ணி வருவது போல் செட் பண்ணினார்கள்...
இப்போது வீடு கட்டும் போதே போர்வெல்
போட்ட பிறகு தான் வீடு கட்டவே ஆரம்பிக்கிறார்கள்...
ஒரு வீட்டுக்கு ஆறு குடம் தண்ணீர் பயன்படுத்தும் போது தெருக்களில் சாக்கடை தண்ணீர் ஓடாமல் தெருக்கள் சுத்தமாகவும். குளமும் சுத்தமாக இருந்தது அன்று ...
இன்று ஒவ்வொரு வீட்டிலும் 500 லிட்டரிலிருந்து ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் செலவழிக்கிறார்கள்..
எங்கு பார்த்தாலும் சாக்கடை தண்ணீர் தான் ஓடுகிறது இந்த தண்ணீரெல்லாம் குளத்தில் போய் தான் கலக்குகிறது..
ஒரு தவைக்கு தண்ணீர் குடித்த குளத்தில்
இன்று கை கால் கூட கழுவ முடியவில்லை எல்லாம் சாக்கடை தண்ணீரும் கக்கூஸ் தண்ணீர் தான் குளத்தில் இருக்கிறது...
யாருக்கெல்லாம் இந்த அனுபவம் இருக்கிறது?