மலைப்பாம்பின் வயிற்றில் விவசாயியின் உடல்., அதிர்ச்சியில் இந்தோனேசிய கிராமம்

மலைப்பாம்பின் வயிற்றில் விவசாயியின் உடல்., அதிர்ச்சியில் இந்தோனேசிய கிராமம்
இந்தோனேசியாவில் 26 அடி மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து விவசாயி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் தெற்குப் கிழக்கு சுலவெசி பகுதியில் உள்ள ஓர் மலைப்பகுதியில், 61 வயது விவசாயி லா நோடி (La Noti) என்பவரை, 26 அடி நீளமுடைய மலைப்பாம்பு விழுங்கியது.

தனது கோழிகளுக்கு தீனியிடும்போது, புல்வெளியில் இருந்து பாய்ந்த பாம்பு, அவரது காலை கடித்து பிடித்து, பின்னர் உடலை நசுக்கி, முழுவதுமாக விழுங்கியுள்ளது.

அன்று அவர் வீடு திரும்பவில்லை என்பதால் குடும்பத்தினர் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சாலை ஓரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் இருப்பதைக் கண்டதும், தேடலைஅங்கு குடிசை ஒன்றிற்கு அருகே வயிறு வீக்கம் கொண்ட ஒரு மலைப் பாம்பை பார்த்த கிராம மக்கள், அதனை பிடித்து வெட்டி பார்த்தனர். அதில், உடை அணிந்த நிலையில் லா நோடியின் உடல் இருந்தது.

இச்சம்பவம் அந்த பகுதியில் முதன்முறையாக பதிவாகியுள்ளது. பாம்புகள் அண்மையில் வீடுகளிலும் தோட்டங்களிலும் அதிகம் காணப்படுவதாகவும், மக்கள்தனியாக காட்டிற்குள் செல்லும்போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது மலைப்பாம்புகள் வாழும் சூழலுக்கு ஏற்பட்ட மாற்றங்களும், உணவுக்கொள்கை பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம் என்று இயற்கை வள பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.