இளைய தலைமுறை தெளிவான சிந்தனையும் அக நோக்கு பார்வையும் கொண்டவர்கள்

உறவினர் மகளின் திருமணம்... இரவு விருந்து...
விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிறு சலசலப்பு...
எளிமையான பெரியவர், தவறுதலாக இந்த மண்டபத்திற்கு வந்தவர்... உணவருந்த அமர்ந்த போது அங்கிருத்த சூப்பர்வைசர் யார் நீங்கள் என்று கேள்வி கேட்கப் போய்... பெரியவர் வருத்தத்தோடு மன்னிப்புக் கோரி இலையை விட்டு எழுந்து வெளியே புறப்பட்டார்.
அருகில் இருந்த என் நண்பருக்கு மனது கேட்கவில்லை...
பின்னாலேயே ஓடிப்போய், உணவருந்தி விட்டு செல்லுங்கள் என்றார்...
அவர் வருத்தத்துடன் மறுத்து விட்டு வெளியே செல்ல முயன்றார்...
பக்கத்திலேயே மணமகள் அறை... மணப் பெண் வெளியே வந்தவள் நிலமையை சட்டென்று புரிந்து கொண்டாள். உடனே பெரியவர் அருகில் சென்று "அப்பா நீங்கள் உணவருந்தி ஆசிர்வாதம் செய்து விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் வாழ்நாள் பூராவும் இந்நிகழ்ச்சி என்னை உறுத்திக் கொண்டேயிருக்கும் என்றாள்.
அப்பக்கம் வந்த மணமகனையும் துணைக்கு அழைத்தாள்.
பெரியவர் அருகில் வந்த மணமகன் சட்டென்று அவர் கையைப் பிடித்து
"வாங்கப்பா" என்று கூற, மணமகள் மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு கூட்டிப் போனார்கள்.
பெரியவரை அமர வைத்து இலையை போட்டு இருவருமே அவருக்கு உணவு பரிமாறிவிட்டு உணவருந்த வேண்டினார்கள.
பெரியவர் மட்டும் உணர்ச்சிவசப் படவில்லை. பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே.
இளைய தலைமுறை தெளிவான சிந்தனையும் அக நோக்கு பார்வையும் கொண்டவர்கள் என்று மகிழ்வாகவும் மனநிறைவோடும் மனம் நெகிழ்ந்தது.