தமிழகம் TNPSC Group 4: தேர்வு மையத்திலேயே ஹால் டிக்கெட்டை கிழித்து வீசிய இளைஞர்.. அனுமதி மறுப்பால் ஆத்திரம்

தமிழகம் TNPSC Group 4: தேர்வு மையத்திலேயே ஹால் டிக்கெட்டை கிழித்து வீசிய இளைஞர்.. அனுமதி மறுப்பால் ஆத்திரம்
TNPSC Group 4: தேர்வு மையத்திலேயே ஹால் டிக்கெட்டை கிழித்து வீசிய இளைஞர்.

கள்ளக்குறிச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு சற்று தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் தேர்வு மையத்துக்கு முன்பே ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டிஎன்பிஎஸ்சி குருப் 4 எழுத்து தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 4,922 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 311 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தத் தேர்வு 12.30 மணி வரை நடைபெறும்.

3,935 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன கண்காணிப்பாளர் என 25 போஸ்டர்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் இந்த தேர்வு எழுதலாம் என்பதால் அதிகமானோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 13,89,738 தேர் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 94 ஆயிரத்து 848 பேர் தேர்வு எழுதுகின்றனர்

விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 9 மணிக்கு முன்னரே சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்கு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்துக்கு இன்று காலை 9 மணியளவில் தேர்வர் ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்தன

இதையடுத்து அவர் தன்னை அனுமதிக்குமாறு கோரினார். ஆனால், 9 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதி இல்லை என ஸ்ட்ரிக்டாக கூறப்பட்டதால் ஆவேசமடைந்த அந்த இளைஞர், அங்கேயே ஹால் டிக்கெட்டை கிழித்துப் போட்டுவிட்டு கோபமாகக் கிளம்பினார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.