மருத்துவமனையில் இருந்தபடியே காணொலியில் மக்களுடன் உரையாடினார் முதல்வர்

மருத்துவமனையில் இருந்தபடியே காணொலியில் மக்களுடன் உரையாடினார் முதல்வர்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தத்திடம் ஆலோசனை மேற்கொண்டு, முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

சென்னை: உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என காணொலி வாயி​லான ஆய்​வுக் கூட்​டத்​தில் ஆட்​சி​யர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். மருத்​து​வ​மனை​யில் இருந்​த​படியே முகாம்​களின் பயனாளி​களு​டன் கலந்​துரைய முதல்​வர், அரசு கோப்​பு​களி​லும் கையெழுத்​திட்​டார்.

தமிழக முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் சென்​னை, கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அங்கு அவர் ஓய்​வில் இருந்​தா​லும் அலு​வல் பணி​களை தொடர்ந்து கவனித்து வரு​கிறார்

அந்த வகையில் “உங்​களு​டன் ஸ்டா​லின்” திட்​டப் பணி​களின் முன்​னேற்​றம் குறித்து காணொலி வாயி​லாக கன்​னி​யாகுமரி மாவட்ட ஆட்சி​யர் ஆர்​.அழகு மீனா, காஞ்​சிபுரம் மாவட்ட ஆட்​சி​யர் கலைச்​செல்வி மோகன், கோயம்​புத்​தூர் மாவட்ட ஆட்​சி​யர் பவன்​கு​மார் ஜி. கிரியப்​பனவர் ஆகியோ​ருடன் ஆய்வு மேற்​கொண்​டார்.

அப்​போது, இது​வரை நடத்​தப்​பட்ட முகாம்​களின் எண்​ணிக்​கை, பெறப்​பட்ட மனுக்​களின் விவரங்​கள் போன்​றவை குறித்து மாவட்ட ஆட்​சி​யர்​களிடம் முதல்​வர் கேட்​டறிந்​தார். ஆய்​வின்​போது, ஆட்​சி​யர்​களிடம் பேசிய முதல்​வர், உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​களில் மக்​களிட​மிருந்து பெறப்​படும் மனுக்​கள் மீது உரிய நடவடிக்​கைகளை உடனடி​யாக எடுக்க வேண்​டும்.

முகாம்​களுக்கு மனுக்​களை அளிக்க வரும் மக்​களுக்​குத் தேவை​யான வசதி​கள் செய்து தரப்பட வேண்​டும் என்று அறிவுறுத்தினார். மேலும், உங்​களு​டன் ஸ்டா​லின் முகாமில் மனுக்​கள் அளிக்க வருகை தந்த பயனாளி​களிடம் காணொலி வாயிலாக முதல்​வர் கலந்​துரை​யாடி, அவர்​களது கோரிக்​கை​களின் விவரங்​களை கேட்​டறிந்​தார். அவற்​றின் மீது உடனடி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் அலு​வலர்​களுக்கு உத்​தர​விட்​டார்.

இதையடுத்​து, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தத்​துடன் பல்​வேறு துறை சார்ந்த திட்​டங்​கள் குறித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆலோ​சனை மேற்​கொண்​டார். முக்​கிய கோப்​பு​களை பார்​வை​யிட்டு ஒப்​புதல் அளித்​தார். நிகழ்​வில், அரசு உயர் அலு​வலர்​கள் உடனிருந்​தனர்.

இதையொட்டி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலைதள பக்​கத்​தில், “மருத்​து​வ​மனை​யில் இருந்​த​படியே உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​கள் குறித்து மாவட்ட ஆட்​சி​யர்​கள் மற்​றும் பொது​மக்​களிடம் கேட்​டறிந்​ததோடு, அரசுக் கோப்​பு​களி​லும் கையெழுத்திட்டேன். ஓய்​வுக்​குப் பிறகு, விரை​வில் மக்​களைச் சந்​திப்பேன்” என குறிப்​பிட்​டுள்​ளார்.

இதற்​கிடையே, முன்​னாள் மத்​திய அமைச்​சர் மு.க.அழகிரி மருத்​து​வ​மனையில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சந்தித்து நலம் விசாரித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறுகை​யில், “முதல்​வர் நலமுடன் இருக்​கிறார். ஓரிரு நாட்​களில் வீடு திரும்புவார்” என்​றார்.

இதுதொடர்​பாக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “முதல்​வர் நலமுடன் இருக்கிறார். அவரது சகோதரர் மு.க.​முத்து மரணமடைந்​த​தால், அன்​றைய தினம் காலை​யில் இருந்து முதல்​வர் உணவருந்தவில்லை. இதைத் தொடர்ந்தே அவருக்கு லேசான தலை சுற்​றல் வந்​தது. இதற்​கான பரிசோதனை நடை​பெறுகிறது” என்​றார்.