தட்டித் தூக்குது தமிழ்நாடு அரசு..ஆதார் கார்டு போதும்! 75000 தர்றாங்க.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

தட்டித் தூக்குது தமிழ்நாடு அரசு..ஆதார் கார்டு போதும்! 75000 தர்றாங்க.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தோட்டக் கலைப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தோட்டக் கலைப் பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், கூறியுள்ளார்

தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு வேளாண் துறை மட்டுமல்லாது தோட்டக்கலை பயிர்கள் துறை, மலைப் பயிர்கள் துறை, பட்டு வளர்ச்சித் துறை மற்றும் வனத்துறை சார்பிலும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம், நுண்ணீர் பாசனம், பாசன குளம் அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தோட்டக் கலைப் பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், கூறியுள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப்பயிர்கள் 1,10,000 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி, திராட்சை, வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, இதர காய்கறிகள், மலர்கள், கண்வலிக்கிழங்கு, காபி, ஏலக்காய் போன்ற பலதரப்பட்ட தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடனும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

குறைந்த நீரில் அதிக மகசூலை பெறும் நோக்கில் இத்திட்டம் அனைத்து வட்டாரத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். 2025-26-ஆம் நிதியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,747 ஹெக்டர் பரப்பளவிற்கு ரூ.37.63 கோடி நிதி இலக்கு பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு துணை நிற்கும் செயல்பாடுகளான பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளைக்கிணறு அல்லது குழாய்கிணறு அமைத்தல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.25,000-க்கு மிகாமலும், டீசல் பம்பு செட் அல்லது மின் மோட்டார் நிறுவதல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.15,000-க்கு மிகாமலும், பாசனக்குழாய்களை நிறுவுதல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.10,000-க்கு மிகாமலும், பண்ணைக்குட்டை அமைத்தல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.75,000-க்கு மிகாமலும் நுண்ணீர் பாசனத்திற்கு பதிவு செய்யப்பட்ட விவசாயிக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.