தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் 20-ந்தேதி மறியல் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் 20-ந்தேதி மறியல் போராட்டம்
சத்துணவு ஊழியர்கள் வருகிற 20-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

செப்டம்பர் 20-ந்தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த இருக்கிறோம்.

டிசம்பர் 17-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.

சென்னை:

சத்துணவு ஊழியர்கள் வருகிற 20-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சங்க தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:-

சத்துணவு துறையில் காலியாக உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வருடங்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

ஆனாலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்போது 7 கட்ட தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

முதல் கட்டமாக வருகிற 20-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் மறியல் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர் 20-ந்தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த இருக்கிறோம்.

அதன்பிறகு அக்டோபர் மாதம் 8-ந்தேதி தற்செயல் விடுப்பு போராட்டமும், நவம்பர் 7-ந்தேதி சென்னையில் பேரணியும் நடத்த உள்ளோம். டிசம்பர் 17-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.