பட்டா மாறுதல் அவசியம்.. ஆனால் நிலத்தை அளந்து பட்டா தருவாங்கன்னு பார்த்தா? தமிழ்நாட்டில் என்னாச்சு?

சென்னை: பட்டா மாறுபாடு, பட்டாவில் பெயர் மாற்றம் உள்ளிட்ட எண்ணற்ற திருத்தங்களை செய்து கொள்வதற்காகவும், பத்திரப்பதிவு நடந்ததுமே பட்டா கிடைக்கும் வகையிலும் ஏராளமான இணையதள வசதிகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது.. இதனால், வேலை நிமிட நேரத்தில் எளிதாக முடிவதுடன், இடைத்தரகர்களின் தொல்லையும் கட்டுக்குள் வந்துள்ளது..
ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் இது தொடர்பான அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.. இந்த சூழ்நிலையைதான் சில அதிகாரிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, லஞ்சமும் கேட்கிறார்கள். அப்படித்தான் ஒரு சர்வேயர் தர்மபுரியில் சிக்கியிருக்கிறார்.
சென்னை: நிலத்தின் உரிமையாளர் பெயர், பரப்பளவு போன்ற பல்வேறு நுட்பமான விவரங்கள் அடங்கிய சான்றிதழையே பட்டா என்கிறோம்.. நிலத்தின் உரிமையை நிரூபிக்க வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் சட்ட ஆவணம் இதுவாகும்.
நிலத்தின் உரிமையாளருக்கு நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் என்பதால், பட்டாவின் முக்கியத்துவம் அதிகமாகிறது.. ஒரு நிலத்தின் வகை, உரிமையாளர் மற்றும் பயன்பாட்டை பொறுத்து பட்டா மாறுபடும்..
பட்டா வகைகள்
எனினும், பட்டாவில், சம்பந்தப்பட்ட மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலம் சர்வே எண், நிலம் வகைகள், வரித் தொகை, விஸ்தீரணம், உரிமையாளரின் பெயர், அவரின் தகப்பனார் அல்லது கணவரின் பெயர் போன்ற விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
நாம் உபயோகப்படுத்தும் பட்டாவில் பல வகைகள் உள்ளன யுடிஆர் பட்டா (UDR Data Registry), 2. தோராய பட்டா & தூய பட்டா, ஏடி கண்டிசன் பட்டா- AD Assignment Land(Adi Dravidar), 4. நில ஒப்படை பட்டா (Assignment patta), 5. டிஎஸ்எல்ஆர் பட்டா (TSLR PATTA = Town Survey Land Record), 6. 2C பட்டா- மர பட்டா - தூசு பட்டா, 7. கூட்டு பட்டா (joint patta), 8. தனி பட்டா (Individual Patta) இப்படி பல வகைகள் உள்ளன
கூட்டுப்பட்டா என்றால் என்ன
இதில் கூட்டுப்பட்டா, தனிப் பட்டா என்றால் என்ன தெரியுமா? ஒன்றுக்கு மேற்பட்ட நில உரிமையாளர்களை கொண்டதுதான் கூட்டு பட்டா (joint patta) என்பார்கள்.. இதில், யார் யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்காது.
அதாவது, யார் நிலம் எங்கே இருக்கிறது என்றும் தெரியாது.. ஏனென்றால், ஒருவருக்கு கணக்கிடலங்காத அளவுக்கு நிலம் இருக்கலாம், சிலருக்கு குறைந்த அளவிலோ நிலம் இருக்கலாம். நிலத்தின் அளவு எப்படியிருந்தாலும், ஒரே மாதிரியான பட்டாவே வழங்கப்பட்டிருக்கும்.. இந்த பட்டாக்களிலும் அனைவரது பெயர்களும் இடம்பெற்றிருக்கும். உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள அனைவரும் உள்ளடக்கிய பட்டாவின் பெயரே கூட்டு பட்டா என்பார்கள்.
கூட்டுப்பட்டா என்றால் என்ன
இதில் கூட்டுப்பட்டா, தனிப் பட்டா என்றால் என்ன தெரியுமா? ஒன்றுக்கு மேற்பட்ட நில உரிமையாளர்களை கொண்டதுதான் கூட்டு பட்டா (joint patta) என்பார்கள்.. இதில், யார் யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்காது.
அதாவது, யார் நிலம் எங்கே இருக்கிறது என்றும் தெரியாது.. ஏனென்றால், ஒருவருக்கு கணக்கிடலங்காத அளவுக்கு நிலம் இருக்கலாம், சிலருக்கு குறைந்த அளவிலோ நிலம் இருக்கலாம். நிலத்தின் அளவு எப்படியிருந்தாலும், ஒரே மாதிரியான பட்டாவே வழங்கப்பட்டிருக்கும்.. இந்த பட்டாக்களிலும் அனைவரது பெயர்களும் இடம்பெற்றிருக்கும். உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள அனைவரும் உள்ளடக்கிய பட்டாவின் பெயரே கூட்டு பட்டா என்பார்கள்.
தனிப்பட்டா என்பது என்ன
தனி பட்டா (Individual Patta) என்பது, தனிப்பட்ட நபரின் பெயரிலிருக்கும் பட்டாவாகும்.. இந்த பட்டாவில் சர்வே நெம்பர் உட்பிரிவு எண் போன்றவை தனித்தனியாக குறிப்பிடப்பட்டிருக்கும்.. தனியாக இருக்கும். நில உரிமை ஆவணத்தின் தன்மையில், ஒவ்வொருவருக்கும் பதிவு செய்யப்பட்டது என்பதால், பட்டா எண், சர்வே எண், உட்பிரிவு, நிலத்தின் அளவு, FMP MAP போன்றவை தெளிவாகவே இடம்பெற்றிருக்கும்
.இந்த தனிப்பட்டாவை, ஒரு விவசாயிக்கு தருவதில்தான், தற்போது லஞ்சம் கேட்டு அசிங்கப்பட்டுள்ளார் தர்மபுரி சர்வேயர்.. இதுதான் அம்மாவட்டத்தில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது..
தர்மபுரி சர்வேயர் கறார்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ளது ஆலமரத்துப்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் இளையராஜா என்ற விவசாயிக்கு 32 வயதாகிறது.. இவர் தன்னுடைய அப்பா பெயரிலிருந்த ஐந்தரை ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து, தன்னுடைய பெயரிலும், தன்னுடைய 2 சகோதரிகளின் பெயர்களிலும் பத்திரப்பதிவு செய்தார்.
இதற்கு தனி பட்டா வழங்கக்கோரி இளையராஜா ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தார். பிறகு, இதுசம்பந்தமான நகலுடன், மணியம்பாடி சர்வேயர் விஜயகுமார் (28 வயது) என்பவரை அணுகியிருக்கிறார்..
அதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வேண்டும், அப்போதுதான் தனி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று சர்வயேர் விஜயகுமார் கறாராக சொன்னாராம்.. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா, தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் இது குறித்து புகார் அளித்தார்..
இதையடுத்து, ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுக்குமாறு அதிகாரிகள் சொல்லவும், அதன்படியே இளையராஜா மணியம்பாடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் சர்வேயர் விஜயகுமாரிடம் தந்தார்.. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஜயகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அத்துடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறார்களாம்.. இதுகுறித்த விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.