​​​​​​​துரோகம் செய்ததாக வைகோ குற்றச்சாட்டு: நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்

​​​​​​​துரோகம் செய்ததாக வைகோ குற்றச்சாட்டு: நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்
​​​​​​​துரோகம் செய்ததாக வைகோ குற்றச்சாட்டு: நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்

சென்னை: ம​தி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா தனது ஆதர​வாளர்​களு​டன் நேற்று உண்​ணா​விரதத்தில் ஈடு​பட்​டார்.

‘மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா, எனக்கு துரோகம் செய்​து​விட்​டார்’ என அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ குற்​றம்​சாட்​டி​யிருந்​தார். இதையொட்​டி, மக்​களிடம் நீதி கேட்டு உண்​ணா​விரதப் போ​ராட்​டம் நடத்​தப்​போவ​தாக மல்லை சத்யா அறி​வித்​திருந்​தார். அதன்​படி, சென்னை சிவா னந்தா சாலை​யில் தனது ஆதர​வாளர்​களு​டன் மல்லை சத்யா நேற்று உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

முன்​ன​தாக செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: வைகோ வழி​யில் ஏராள​மான போ​ராட்​டத்​தில் பங்​கேற்​று, 32 வழக்​கு​களைப் பெற்​றிருக்​கி றேன். துரை வைகோ அரசி​யலுக்கு வந்​தது முதல், வைகோவுக்கு நெருக்​க​மானவர்​கள் ஓரங்​கட்​டப்​படு​வதும், அலட்​சி​யப்​படுத்​தப்​படு​வதும் தொடர்ந்து நடந்​தது. துரை சொன்​னால் மட்​டுமே பேச ​முடி​யும் என்ற நிலைக்கு வைகோ தள்​ளப்​பட்​டார். உட்​கட்சி ஜனநாய கத்தை பாது​காக்க வேண்​டும் என்ற நோக்​கில் மக்​கள் மன்​றத்​தில் நீதி கேட்டு நிற்​கிறோம்.

வை​கோ​வின் கடைசி காலம்’ என துரை அடிக்​கடி சொல்​லி, அவரது ஆயுளைக் குறைக்​கிறார். அவரைப் பாது​காக்க வேண்​டிய கடமை இனி துரை​யின் கையில் ​தான் இருக்​கிறது. அவர் நீண்ட நாட் ​கள் ஆரோக்​கிய​மாக இருந்து திரா​விட இயக்க லட்​சி​யங்​களை வென்​றெடுக்க வேண்​டும்.

அதே​நேரம், கடந்த 2001-ம் ஆண்டு தொகுதி உடன்​பாட்​டுக்கு ஒப்​புக்​கொண்ட பிறகு, கூட்​ டணி இல்லை என அறி​வித்​ததை ​யும், 2006-ம் ஆண்டு திமுக மாநாட் ​டில் பங்​கேற்​ப​தாகச் சொல்​லி​விட்டு போயஸ் தோட்​டத்​துக்கு வைகோ சென்​றதை​யும் நாடு மறக்​க​வில்​லை. அது​போன்று செயல்​பட்​டால் மிச்​சமிருக்​கும் நம்​ப கத்​தன்​மை​யும் அடியோடு தகர்க்​கப்​படும்.