படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: ஐஐடி மாநாட்டில் அண்ணாமலை வலியுறுத்தல்

படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: ஐஐடி மாநாட்டில் அண்ணாமலை வலியுறுத்தல்
படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: ஐஐடி மாநாட்டில் அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: ‘படிக்​கும் காலத்​திலேயே மாணவர்​களுக்கு விவ​சா​யம் குறித்த சிந்​தனையை ஏற்​படுத்த வேண்​டும்’ என்று ஐஐடி மாநாட்​டில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை வலி​யுறுத்​தி​னார்.

சென்னை ஐஐடி மற்​றும் ‘வி தி லீடர்ஸ் பவுண்​டேஷன்’ என்ற அமைப்​பின் சார்​பில் இளை​யோர் வேளாண் மாநாடு நேற்று நடை​ பெற்​றது. இதில் தமிழக பாஜக முன்​னாள் தலைவரும், ‘வி தி லீடர்ஸ் பவுண்​டேஷன்’ அமைப்​பின் தலைமை ஊக்​கு​விப்​பாள​ரு​மான அண்​ணா​மலை, இத்திட்​டத்தை தொடங்​கி​வைத்து பேசி​ய​ தாவது: இந்​திய பொருளா​தார வளர்ச்​சி​யில் வேளாண்​மை​யின் பங்கு மிகக் குறை​வாக இருக்​கிறது. அதை மாற்​றக்​கூடிய முயற்​சி​யாகத்​தான் இது​போன்ற நிகழ்ச்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன. இயற்கை வேளாண் பொருட்​களைத் தேடி வாங்​கும் அளவுக்கு மக்​க ளிடையே மிகப்​பெரிய அளவில் விழிப்​புணர்வு ஏற்​பட்​டுள்​ளது.

விவ​சா​யத்​தில் அதிக ரசாயனங்​கள் பயன்​படுத்​தப்​படு​வ​தால் புற்​று​ நோய் உள்​ளிட்ட நோய்​களின் பாதிப்பு அதி​கரித்து வரு​வதை பார்க்​கிறோம். இதனால், நிறைய விவ​சா​யிகள் இயற்கை விவ​சா​யத்​துக்கு மாறி வரு​கின்​றனர். விவ​ சா​யம் என்​பது முற்​றி​லும் ஒரு புதிய துறை. தகவல் தொழில்​நுட்​பத்​துறை வேலையை உதறி​விட்டு இயற்கை விவ​சா​யத்​துக்கு மாறி ​யுள்ள பலரை, குறிப்​பாகப் பெண் ​களை​யும் நாம் பார்க்​கிறோம்.

விவ​சா​யம் செய்ய வேண்​டும் என்ற பலர் விரும்​பி​னாலும் போதிய அளவு நிலம் இருக்​காது. இப்​படிப்​பட்ட சூழலில் தற்​போது தொடங்​கிவைக்​கப்​பட்​டுள்ள இளை​யோர் வேளாண் ஊக்​கு​விப்பு திட்​டம் விவ​சா​யத்​தில் ஆர்​வ​முள்ள இளைஞர்​களுக்கு நல்​லதொரு தளத்தை ஏற்​படுத்தி தரும். இங்கு வரும் இளைஞர்​களுக்கு இயற்கை விவ​சா​யம் குறித்து கற்​றுத்​தரு​வார்​கள். மாணவர்​கள் படிக்​கும் காலத்​தி லேயே அவர்​கள் மனதில் வேளாண் குறித்த சிந்​தனையை ஏற்​ படுத்த வேண்​டும். இது​தான் புதிய திட்​டத்​தின் தலை​யாய நோக்​கம் ஆகும். இவ்​வாறு கூறி​னார்.

ஐஐடி இயக்​குநர் வி.​காமகோடி பேசும்​போது, ‘‘வேளாண் வளர்ச்​சி​யில் தகவல் தொழில்​நுட்​பம் முக்​கிய பங்கு ஆற்ற முடி​யும். ஆளில்லா விவ​சா​யம், மின்​சா​ரத்​தில் இயங்​கக்​கூடிய டிராக்​டர்​கள், மிக​வும் எடை குறைந்த வேளாண் கருவி​கள் பயன்​பாடு குறித்து ஐஐடி​யில் ஆராய்ச்சி மேற்​கொண் ​டோம். இயற்கை விவ​சா​யத்​தில் ஈடு​படு​மாறு இளைஞர்​களை ஊக்​குவிக்க வேண்​டும். தற்​போது காலநிலை மாற்​றம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், வறட்​சி​யை​யும், பெரு​வெள்​ளத்​தை​யும் தாக்​குப்​பிடிக்​கக் கூடிய தானி​யங்​களும், பயிறுகளும் தேவை’’ என்​றார்.

நாண்டி பவுண்​டேஷன் தலை​மைச் செயல் அலு​வலர் மனோஜ் குமார் பேசும்​போது, "எங்​கள் அறக்​கட்​டளை ஏறத்​தாழ 10 லட்​சம் விவ​சா​யிகளை இயற்கை விவ ​சா​யிகளாக மாற்​றி​யிருக்​கிறது. அவர்​கள் ஆந்​தி​ரா, பஞ்​சாப், மகா​ராஷ்டிரா மாநிலங்​களில் விவ​சா​யம் செய்​கின்​றனர்" என்​றார். முன்​ன​தாக, பவுண்​டேஷன் தலைமை செயல் அலு​வலர்​ பிர​பாகர்​ அறி​முக​வுரை ஆற்​றி​னார்​.