வெளியானது அதிகாரப்பூர்வ லிஸ்ட்.. தமிழ்நாட்டில் 48 லட்சம் பேருக்கு.. வங்கி கணக்கில் தரப்படும் ரூ.2000

வெளியானது அதிகாரப்பூர்வ லிஸ்ட்.. தமிழ்நாட்டில் 48 லட்சம் பேருக்கு.. வங்கி கணக்கில் தரப்படும் ரூ.2000
ஒவ்வொரு பயனாளியும் பி.எம் கிசான் பயனாளிகள் பட்டியலைச் சரிபார்ப்பது கட்டாயமாகும்.

சென்னை: பி.எம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20-வது தவணை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளியும் பி.எம் கிசான் பயனாளிகள் பட்டியலைச் சரிபார்ப்பது கட்டாயமாகும்.

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் ஒவ்வொரு தவணை வெளியாவதற்கு முன்பும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், 20-வது தவணைக்கான பயனாளிகள் பட்டியலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, அடுத்த தவணை உங்களுக்குக் கிடைக்குமா இல்லையா என்பதைப் பார்க்க இந்தப் பட்டியலைச் சரிபார்க்கலாம்

பி.எம். கிசான் திட்டத்தின் 20-வது தவணை விரைவில் அளிக்கப்பட உள்ளது. இந்த முறையும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.2000 செலுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 48 லட்சம் பேர் இந்த தவணையை பெற உள்ளனர்.

.எம். கிசான் யோஜனா திட்டத்தின் 19-வது தவணை கடந்த பிப்ரவரி 2025-ல் விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தவணைத் தொகை செலுத்தப்படும். எனவே, 20-வது தவணை ஜூலை 2025 மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் வர வாய்ப்புள்ளது. அதாவது இந்த வாரம் அல்லது அடுத்த 5 தினங்களுக்குள் பணம் வரும். இதுகுறித்து அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை என்றாலும், இதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

-கேஒய்சி முடித்தவர்கள், பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், சரியான வங்கி விவரங்களைக் கொடுத்திருப்பவர்கள் மற்றும் விவசாயப் பதிவேட்டில் பெயர் உள்ளவர்கள் ஆகிய விவசாயிகளின் கணக்குகளுக்கு மட்டுமே அரசாங்கம் ரூ.2000 செலுத்தும். இந்தத் தகவல்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், பி.எம். கிசானின் அடுத்த தவணை கிடைக்காமல் போகலாம்.

தமிழகத்தில் சுமார் 48 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.24 லட்சம் விவசாயிகள் இந்தத் தவணைத் தொகையினைப் பெறவுள்ளனர்.

பிஎம்-கிசான் திட்டம் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் செலுத்தப்படுகிறது

.விவசாயிகள் பி.எம். கிசானில் பதிவு செய்திருப்பது மட்டும் போதாது, விவசாயப் பதிவேட்டிலும் பெயர் இருப்பது அவசியம். இதற்கு, உங்கள் மாநிலத்தின் அரசு இணையதளத்தில் உள்நுழையவும் அல்லது விவசாயப் பதிவேட்டு செயலியை பதிவிறக்கம் செய்யவும். அல்லது அருகிலுள்ள இ சேவை மையத்திற்குச் சென்று விண்ணப்பத்தை நிரப்பவும். இதுவரை 19 தவணை பணம் விவசாயிகளின் கணக்குகளில் வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் மாதங்களில் மூன்று தவணைகளாக ரூ.6,000 விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கி வருகிறது. இதன் மூலம், ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை ரூ.2000 வங்கி கணக்கில் நேரடியாக வந்து சேரும்.