பெங்களூரில் ஓவர்நைட்டில்.. மாயமான சிட் பண்ட் கம்பெனி! ரூ.50 கோடியுடன் தலைமறைவான கேரள தம்பதி

பெங்களூர்: கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி மோசடி செய்துள்ளனர். அதிக வட்டி தருவதாகப் பலரிடம் இருந்து முதலீடுகளைப் பெற்ற இந்தத் தம்பதி, ஓவர் நைட்டில் மாயமாகினர். இதனால் இவர்களிடம் முதலீடு செய்த மக்கள் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். சுமார் ரூ.50 கோடி வரை இந்தத் தம்பதி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
பொதுவாக மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் பணத்தைச் சேமிக்க சிட் பண்ட்டை தேர்வு செய்வார்கள். பல நல்ல சிட் பண்ட் நிறுவனங்கள் உள்ளன. அதில் முதலீடு செய்தால் பிரச்சினை இல்லை. ஆனால், சில மோசமான சிட் பண்ட் நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. அதில் முதலீடு செய்தால் நமது மொத்த முதலீடும் காலியாகிவிடும். அப்படியொரு மோசடி தான் இப்போது கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது
சிட் ஃபண்ட் மோசடி
கேரளாவைச் சேர்ந்த இந்தத் தம்பதி கர்நாடகாவில் பெங்களூர் மற்றும் மங்களூரில் சிட் ஃபண்ட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அதில் அவர்கள் 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது டாமி மற்றும் ஷைனி என அடையாளம் காணப்பட்ட இந்த ஜோடி, ராமமூர்த்தி நகரில் அமைந்துள்ள ஏ&ஏ சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிக வட்டி தருவதாகச் சொல்லி முதலீடுகளைப் பெற்றுள்ளது. 15 முதல் 20 சதவீதம் வரை வருமானத்தை வழங்குவதாகச் சொல்லி முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளனர்
.பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பையே இதில் முதலீடு செய்துள்ளனர்.. இன்னும் சிலர் நிலையான வருமானத்திற்காகச் சொத்துக்களை விற்றும் முதலீடு செய்துள்ளனர். பல ஆண்டுகளாக நிறுவனம் சரியான நேரத்தில் பணத்தைக் கொடுத்துள்ளது. இதனால் மேலும் மேலும் பலர் முதலீடு செய்துள்ளனர். இந்தச் சூழலில் தான் இந்த நிறுவனம் ஓவர் நைட்டில் மாயமாகியுள்ளது.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த இரண்டு நாட்களில் இந்த நிறுவனத்திற்கு எதிராகப் பலரும் புகாரளித்துள்ளனர். குறிப்பாகக் கிழக்கு பெங்களூரில் உள்ள ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையத்தில் ஏகப்பட்ட பேர் புகாரளிக்கக் குவிந்துள்ளனர். சிட் ஃபண்ட் நிறுவனத்தின் ராமமூர்த்தி நகர் அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கிறது. மேலும், தம்பதியினரைக் கால் செய்தபோதும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதையடுத்தே முதலீட்டாளர்கள் போலீஸ் நிலையத்தை அணுகினர்
முதலில் கடந்த ஜூலை 5ஆம் தேதி, பி.டி. சாவியோ என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். 64 வயதான சாவியோ ராமமூர்த்தி நகரில் வசிப்பவர். இவர் சுமார் ரூ.70 லட்சத்தை அந்த சிட் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். சாவியோவின் புகாரின்படி, டோமி தம்பதியினர் 2005ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் சிட் ஃபண்ட் மற்றும் நிதி வணிகத்தை நடத்தி வந்துள்ளனர். அதிக வருமானம் தருவதாக ஆசை காட்டி நூற்றுக்கணக்கான முதலீடுகளை ஈர்த்துள்ளனர். நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மட்டுமின்றி தம்பதியரின் தனிப்பட்ட கணக்குகளிலும் பணத்தை வாங்க
பெங்களூர்: கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி மோசடி செய்துள்ளனர். அதிக வட்டி தருவதாகப் பலரிடம் இருந்து முதலீடுகளைப் பெற்ற இந்தத் தம்பதி, ஓவர் நைட்டில் மாயமாகினர். இதனால் இவர்களிடம் முதலீடு செய்த மக்கள் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். சுமார் ரூ.50 கோடி வரை இந்தத் தம்பதி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
பொதுவாக மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் பணத்தைச் சேமிக்க சிட் பண்ட்டை தேர்வு செய்வார்கள். பல நல்ல சிட் பண்ட் நிறுவனங்கள் உள்ளன. அதில் முதலீடு செய்தால் பிரச்சினை இல்லை. ஆனால், சில மோசமான சிட் பண்ட் நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. அதில் முதலீடு செய்தால் நமது மொத்த முதலீடும் காலியாகிவிடும். அப்படியொரு மோசடி தான் இப்போது கர்நாடகா
சிட் ஃபண்ட் மோசடி
கேரளாவைச் சேர்ந்த இந்தத் தம்பதி கர்நாடகாவில் பெங்களூர் மற்றும் மங்களூரில் சிட் ஃபண்ட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அதில் அவர்கள் 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது டாமி மற்றும் ஷைனி என அடையாளம் காணப்பட்ட இந்த ஜோடி, ராமமூர்த்தி நகரில் அமைந்துள்ள ஏ&ஏ சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிக வட்டி தருவதாகச் சொல்லி முதலீடுகளைப் பெற்றுள்ளது. 15 முதல் 20 சதவீதம் வரை வருமானத்தை வழங்குவதாகச் சொல்லி முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளனர்.
பல கோடி முதலீடு
பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பையே இதில் முதலீடு செய்துள்ளனர்.. இன்னும் சிலர் நிலையான வருமானத்திற்காகச் சொத்துக்களை விற்றும் முதலீடு செய்துள்ளனர். பல ஆண்டுகளாக நிறுவனம் சரியான நேரத்தில் பணத்தைக் கொடுத்துள்ளது. இதனால் மேலும் மேலும் பலர் முதலீடு செய்துள்ளனர். இந்தச் சூழலில் தான் இந்த நிறுவனம் ஓவர் நைட்டில் மாயமாகியுள்ளது.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த இரண்டு நாட்களில் இந்த நிறுவனத்திற்கு எதிராகப் பலரும் புகாரளித்துள்ளனர். குறிப்பாகக் கிழக்கு பெங்களூரில் உள்ள ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையத்தில் ஏகப்பட்ட பேர் புகாரளிக்கக் குவிந்துள்ளனர். சிட் ஃபண்ட் நிறுவனத்தின் ராமமூர்த்தி நகர் அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கிறது. மேலும், தம்பதியினரைக் கால் செய்தபோதும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதையடுத்தே முதலீட்டாளர்கள் போலீஸ் நிலையத்தை அணுகினர்.
போலீஸ் நிலையத்தில் புகார்
முதலில் கடந்த ஜூலை 5ஆம் தேதி, பி.டி. சாவியோ என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். 64 வயதான சாவியோ ராமமூர்த்தி நகரில் வசிப்பவர். இவர் சுமார் ரூ.70 லட்சத்தை அந்த சிட் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். சாவியோவின் புகாரின்படி, டோமி தம்பதியினர் 2005ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் சிட் ஃபண்ட் மற்றும் நிதி வணிகத்தை நடத்தி வந்துள்ளனர். அதிக வருமானம் தருவதாக ஆசை காட்டி நூற்றுக்கணக்கான முதலீடுகளை ஈர்த்துள்ளனர். நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மட்டுமின்றி தம்பதியரின் தனிப்பட்ட கணக்குகளிலும் பணத்தை வாங்கியுள்ளனர்.
கேரள தம்பதி மாயம்
சாவியோ தனது புகாரில் மேலும், "அவர்கள் என்னிடமிருந்தும், என் குடும்பத்தினரிடமிருந்தும் 70 லட்சம் ரூபாயும், மற்றவர்களிடமிருந்து பல கோடி ரூபாயும் வசூலித்துள்ளனர். நாங்கள் பணம் குறித்துத் தெரிந்து கொள்ள ஆபீசுக்கு சென்றபோது, அது பூட்டியிருந்தது. தம்பதியரையும் காணவில்லை. அவர்களின் போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ராமமூர்த்தி நகர் போலீசார் சிட் ஃபண்ட்ஸ் சட்டம் 1982, இந்தியத் தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.