பள்ளி மாணவிகள் கர்ப்பம் தரிக்க ஊக்கத்தொகை - பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி

பள்ளி மாணவிகள் கர்ப்பம் தரிக்க ஊக்கத்தொகை - பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி
ரஷ்யாவில் பள்ளி மாணவிகள் கர்ப்பம் தரிக்க அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது.

ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவிகள் கர்ப்பம் தரித்து குழந்தை பெறுவதற்கு 100,000 ரூபிள் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

2023-இல் ரஷ்யாவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 1.41 குழந்தைகள் தான் பிறந்தனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையை நிலைத்த விகிதத்தில் வைத்திருக்க வேண்டிய 2.05 விகிதத்தை விடக் குறைவாகும்

இந்த திட்டம் சமூக வாத மற்றும் நெறிமுறை ரீதியாக விமர்சனங்களை சந்தித்தாலும், வலிமையான தேசத்தை உருவாக்க மக்கள் தொகை முக்கியம் என்ற வலியுறுத்தலின் அடிப்படையில், புடின் அரசு தொடர்ந்து அழுத்தம் செலுத்துகிறது.

பிற நாடுகளும் இதேபோன்ற “பிறப்பை ஊக்குவிக்கும்” திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

ஹங்கேரியில் 3 குழந்தைகள் பெற்ற குடும்பங்களுக்கு வரிவிலக்கு, போலந்தில் குழந்தைக்கு மாதம் 500 ஸ்லாட்டி உதவித்தொகை வழங்கப்படுகிறது. டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க பெண்களுக்கு குழந்தை பெற $5,000 வழங்கும் திட்டம் முன்வைத்துள்ளார்

இத்தகைய திட்டங்கள் சில இன/மத/வர்க்க அடிப்படையில் ஏற்படும் தவறான போக்குகளை உருவாக்கக் கூடும் என்பதால் முக்கியமான சமூக மற்றும் நேர்மறை கருத்தாய்வுகள் அவசியம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இத்துடன், மக்களுக்கு விருப்பம் உள்ள வாழ்க்கைத் தீர்மானங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்தப் திட்டங்கள் காணப்படுகின்றன.