ஆட்டுக்கல்லை அம்மிக்கல் இப்படி வைக்காதீங்க.. வறுமை வந்துருமாம்.. உரல், ஆட்டுக்குழவிக்கு உரிய திசை?

ஆட்டுக்கல்லை அம்மிக்கல் இப்படி வைக்காதீங்க.. வறுமை வந்துருமாம்.. உரல், ஆட்டுக்குழவிக்கு உரிய திசை?
வாஸ்து குறைபாடுகள் இல்லாமல் இருந்தாலே, அந்த குடும்பத்தில் ஆரோக்கியம்

சென்னை: வாஸ்து குறைபாடுகள் இல்லாமல் இருந்தாலே, அந்த குடும்பத்தில் ஆரோக்கியம், நிதி நிலைமை, செழிப்பாக இருக்கும் என்பார்கள்.. குறிப்பாக வீட்டு வாசலுக்கு எதிரேயே தண்ணீர் குழாய், கிணறு, அடி பம்பு இருக்கக்கூடாது என்பார்கள்.. அதேபோல, அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை அடைத்து வைக்கலாகாது, அப்படியிருந்தால் குடும்பத்தில் வறுமை பிடித்து கொள்ளும் என்பார்கள்.. அதேசமயம், இந்த அம்மிக்கல் ஆட்டுக்கல்லை எப்படி பராமரிக்க வேண்டும்? எந்த திசையில் வைக்க வேண்டும்? இதனால் ஏற்படும் வாஸ்து பலன் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பு அரிதாக இருந்தது. காரணம், அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றை பயன்படுத்தி குனிந்து, நிமிர்ந்து, வளைந்து, நெளிந்து வீட்டு வேலைகள் செய்தனர்.. இன்று அம்மிக்கல் ஆட்டுக்கல்லின் பயன்பாடுகள் மிகவும் குறைந்துவிட்டன..

அம்மிக்கல வைக்கும் திசை

ஆனால், உரல், அம்மி இரண்டுமே வீடுகளில் இருக்க வேண்டிய பொருட்களாகும். இவை இரண்டுமே மகாலட்சுமியின் அம்சமாகும்..

அம்மிக்குழவி, உரல், குழவியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசையில், அம்மிக்கல்லை வைத்தால் தொழிலில் வருமானம் பெருகும்... தென்மேற்கு பகுதியில் கிச்சன் இருந்தால், தென்கிழக்கு பகுதியில்தான் அம்மிக்கல்லையும், ஆட்டுக்கல்லையும் வைக்க வேண்டும்.

வீட்டின் தென்கிழக்கு மூலை தான் இது போன்ற பொருட்களை வைப்பதற்கு மிகச்சரியான திசையாகும்.. அதிலும், வீட்டிற்குள் வைப்பதை விட வீட்டின் பின்புறத்தில் வைத்தால் நல்ல பலனை கொடுக்கும் என்பார்கள்.. ஆனால், எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் மட்டும் வைக்க வேண்டாம். அப்படி தெரியாமல் வைத்தால் திசையை உடனே மாற்றி விடுங்கள்.

இந்த திசையில் மட்டும் கூடாது

ஆனால், வடகிழக்கு திசையில் மட்டும் அம்மிக்கல், ஆட்டுக்கல்லை வைக்கக்கூடாது.. வடகிழக்கு என்பது வெட்ட வெளியாகவும் பாரம் இல்லாமலும் இருந்தால்தான் நிதி நிலைமை சீராக இருக்கும்.. அந்த திசையில் அம்மிக்கல்லை போட்டு வைத்தால் வருமானம் தடைபடும்.

ஒருவீட்டுக்கு குடிபுக நேரிடும்போது, நல்ல நேரம் பார்த்து தான் அம்மிக்கல்லை, ஆட்டுக்கல்லை வைக்க வேண்டும்.. அதேபோல, சூரியன் உதிக்கும் முன்பு அல்லது அஸ்தமனமான பின்பு இவைகளை இடம் மாற்றக்கூடாது.

ஆட்டுக்கல் பராமரிப்பு

எப்போதுமே அம்மிக்கல், ஆட்டுக்கல்லை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. ஈரத்துணியால் துடைக்காமல், தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும். அதற்காக சோப்பு, துணி துவைக்கும் பவுடரை கொட்டி கழுவக்கூடாது.. ஓருவேளை அம்மி, உரலை பயன்படுத்தாமல் இருந்தாலோ அல்லது சேதாரமாகி இருந்தாலோ அவற்றை உடனே அப்பறப்படுத்திவிட வேண்டும்.. இது குடும்பத்தில் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும்..

அதேபோல, அம்மிக்கல், ஆட்டுக்கல்லுக்கு மஞ்சள் பூசி, பொட்டு வைத்து வணங்கி வந்தால் மிகவிம் நல்லது.. மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால், இதன்மீது தெரியாமல்கூட உட்கார்ந்துவிடவோ, கால் படவோ கூடாது..

அம்மிக்கல் கனவில் வந்தால்

அம்மிக்கல், ஆட்டுக்கல் குறித்து வாஸ்து சாஸ்திரத்தை போல, கனவு சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ளது..

அதாவது, அம்மிக்கல் உங்கள் கனவில் வந்தால், அது கடின உழைப்பு, பொறுமை, மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான அறிகுறியாகும்.. உங்கள் இலக்குகளை அடைய விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும் என்பதையும், வெற்றிக்கு பொறுமை அவசியம் என்பதையும் இந்த கனவு உங்களுக்கு உணர்த்துகிறதாம்.