சாய் அபயங்கருக்கு திரைப்படம் கிடைப்பது இதனால் தான்- சாம் சி.எஸ் ஓபன் டாக்..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சாம் சிஎஸ்.
கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து பெரும் புகழைப்பெற்றார் சாம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சாம் சிஎஸ். இவரது இசையில் உருவான விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து பெரும் புகழைப்பெற்றார் சாம்.
மறுபக்கம் வெறும் 3 இண்டிபெண்டண்ட் பாடல்களை வெளியிட்ட சாய் அபயங்கரிடம் 8 திரைப்படங்கள் லைன் அப்பில் உள்ளது. அந்த பட்டியலில், சூர்யா, அல்லு அர்ஜுன், கார்த்தி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களை கையில் வைத்துள்ளார்.
இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளியாகாமல் எப்படி இத்தனை படங்களில் சாய் அபயங்கர் கமிட் ஆனார். அவர் பிரபல பாடகர்களின் மகனாக இருப்பதால் தான் என நெட்டிசன்கள் பேச , சாம் சிஎஸ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு ஏன் பெரிய திரைப்படங்கள் கிடைப்பதில்லை என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளிக்கு வகையில் சாம் சிஎஸ் சில விஷயங்களை கூறியுள்ளார் அதில் அவர்
"சாய் திறமைவாய்ந்த மியூசிசியன் என்பது எனக்கு தெரியும். அவரை புக் பண்ணிய இயக்குனர்களுக்கு தெரியும். ஆடியன்ஸுக்கு ஏன் தெரியவில்லை என்றால் அவருடைய படங்கள் எதுவுமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் நிஜமாகவே அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. அவர் நிறைய பாடல்களை பண்ணி வைத்திருக்கிறார். அவரை கமிட் பண்ணிய டைரக்டர்கள் அவருடைய ஒர்க் பிடித்து தான் பண்ணுகிறார்கள். அவருமே எந்தவித பி.ஆர் வேலைகளும் செய்து வரவில்லை. அவருடைய 2, 3 பாடல்கள் தான் ரிலீஸ் ஆகிருக்கு அதுக்குள்ள எப்படி இவ்ளோ வாய்ப்பு என்று தான் கேட்கிறார்கள்.
மேலும் சாய் அபயங்கரை இப்படி சித்தரித்து நானே இதுபோன்று பதிவிட்டு எனக்கான பி.ஆர் வேலைகளை செய்து வருகிறேனா என ஒருவர் கேட்டார். ஒருவேளை நான் தான் அப்படி போட்டேன் என ஆதாரத்துடன் ஒருவர் சொல்லிவிட்டால் நான் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்.
அவருக்கு அதிகமான திரைப்படம் கிடைக்கிறது எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை, எனக்கு அப்படி தோணவும் தோணாது, நான் செய்யும் வேலைகளில் மிக திருப்திகரமாக உணர்கிறேன்" என கூறியுள்ளார்.