ஆன்லைனில் மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்கும் நபர்கள் கவனத்திற்கு.....

ஆன்லைனில் மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்கும் நபர்கள் கவனத்திற்கு.....
விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் கோவை மக்களே ...

நுகர்வோருக்கு தேவையான வித கைப்பேசி, மடிக்கணினி, வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள், அணிகலன், காஸ்மெடிக்ஸ், புத்தகங்கள், அலுவலகங்களுக்கு தேவையான பொருட்கள் என அனைத்து வித பொருட்களையும் இணையத்தளம் வழியே வழங்கும் 'இ-காமர்ஸ்' என்றழைக்கப்படும் இணையவழி வர்த்தக தளமான நிறுவனங்கள் இந்தியாவில் ஏராளமானவை இந்திய முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் தங்கள் சேவையை வழங்கி வருகின்றன.

என்ன பொருளாக இருந்தாலும் 1-2 நாட்களில் டோர் டெலிவரி செய்து வாடிக்கையாளர்களை இதுபோன்ற நிறுவனங்கள் குவித்தன. இவற்றில் பல நிறுவனங்கள் தற்போது மளிகை, காய்கறி, பழங்கள் என சூப்பர் மார்க்கெட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் தங்களுக்கென பிரம்மாண்ட குடோன் அமைத்து அதில் வாங்கி குவித்து வைத்து, அந்த பொருட்களைதங்கள் இணையத்தில் பட்டியலிட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

நேரில் கடைக்கு சென்று வாங்க நேரமில்லாதோர் மற்றும் தள்ளுபடி விலையில் பொருட்களை தட்டி தூக்கலாம் என்று விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை பயன்படுத்திவருகின்றனர். இந்த சேவையை கோவையில் வழங்கும் பிரபல இணையவழி வர்த்தக தளமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் குடோனில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது..

ஃப்ளிப்கார்ட் மூலம் உணவு பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் இயங்கும் அந்த நிறுவனத்தின் குடோனில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது 250 கிலோவுக்கும் மேல் காலாவதியான பேரிச்சம் பழங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. காலாவதியான பேரிச்சம் பழங்களை கைப்பற்றி அவற்றை அதிகாரிகள் அழித்துள்ளனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இனையம் வழியே பொருட்களை, குறிப்பாக உணவு சார்ந்த பொருட்களை வாங்குவோர் மிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்பது இதுபோல நடைபெறும் சம்பவங்களால் உணர்த்தப்படுகிறது.

'குவிக் காமர்ஸ்' வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

இப்போது 'இ-காமர்ஸ்' போலவே ஆர்டர் செய்தல் 10 நிமிடத்தில் வீட்டுக்கு வரும் 'குவிக் காமர்ஸ் ' சேவைகள் மாநகரங்களில் உள்ளன. மாநகருக்குள் முக்கியமான மண்டலங்களில் சிறு குடோன் அமைத்து, அங்கிருந்து வீடுகளுக்கு அதிக வேகமாக பொருட்களை வழங்கும் நிறுவனங்களாக இவை உள்ளன. இது போன்ற இனைய வழி நிறுவனங்கள் மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு 'எக்ஸ்பயரி டேட்' பகுதியை கவனித்து பயன்படுத்த வேண்டும் மக்களே...