ரயில் எஞ்சினில் கழிப்பறை இருக்காது... லோகோ பைலட் எப்படி சமாளிப்பாங்க...? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

ரயில் எஞ்சினில் கழிப்பறை இருக்காது... லோகோ பைலட் எப்படி சமாளிப்பாங்க...? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இந்திய ரயில்களில் உள்ள வழக்கமான மற்றும் ஏசி கோச்சுகளில் கழிப்பறைகள் உள்ளன

இந்திய ரயில்களில் உள்ள வழக்கமான மற்றும் ஏசி கோச்சுகளில் கழிப்பறைகள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். ஆனால், ரயிலை இயக்கும் லோகோ பைலட் கழிப்பறையைப் பயன்படுத்த நினைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா

ரயில்களில் உள்ள கழிப்பறைகளைப் பற்றி பேசவே வேண்டாம். நிச்சயமாக ரயில் கழிப்பறைகள் சற்று முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் இருக்கும். ஆனால், சமீபத்தில் சில வருடங்களாகவே இந்த நிலையானது மாறி உள்ளது. ரயில்களில் உள்ள கழிப்பறைகளின் நிலை உண்மையில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது

முன்னதாக எவ்வளவுதான் அவசரமாக இருந்தபோதிலும், பல பயணிகள் ரயில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தனர். சுகாதாரம் காரணமாக கழிப்பறைக்குள் நுழைய முடியாமல் தவித்தனர். இன்று வரை அதனை ஒரு சிலர் தங்களுடைய கடைசி ஆப்ஷனாகவே வைத்திருக்கிறார்கள்

இந்திய ரயில்களில் உள்ள வழக்கமான மற்றும் ஏசி கோச்சுகளில் கழிப்பறைகள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். ஆனால், ரயிலை இயக்கும் லோகோ பைலட் கழிப்பறையைப் பயன்படுத்த நினைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? இந்தக் கேள்வியை ஒரு சிலர் மட்டுமே எண்ணுகின்றனர். இதற்கான பதில் சுவாரஸ்யமானதாக அமைகிறது

லோகோ பைலட்ஸ் எப்போதுமே ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகுதான் தங்களுடைய பணியைத் தொடங்குவார்கள். பயணம் ஆரம்பித்த 2 முதல் 3 மணி நேரத்திற்காவது அவர்களால் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாது என்பதால் கட்டாயமாகப் பணிக்கு வருவதற்கு முன்பு கழிப்பறையைப் பயன்படுத்தி இருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் பயணிகளுக்குத் தடையில்லாத சேவையை வழங்க வேண்டும் என்பதே. இந்த வழக்கமான தயார்படுத்துதல் ரயில்வே நெறிமுறைக்கு உட்பட்டது

ரயிலை இயக்குவதற்கு முன்பு லோகோ பைலட்டுகள் கட்டாயமாகக் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு ரயில்வே அதிகாரி கூறுகிறார். இதனால், பயணத்தின் இடையே கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். ரயில் எஞ்சினில் கழிப்பறை இல்லாத காரணத்தால் இந்த மாதிரியான ஒரு முன்னேற்பாடு செய்யப்படுகிறது

எனினும், பயணத்தின்போது தவிர்க்க முடியாத தேவை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக லோகோ பைலட் கண்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தெரிவிப்பார். இதனால் அடுத்த ரயில் நிலையத்தில் அட்டவணையில் குறிப்பிடப்படாத ரயில் நிறுத்தம் செய்வதற்கு அனுமதிக்கப்படும். அந்த ரயில் நிலையத்தில் லோகோ பைலட் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற சூழ்நிலைகள் பெரும்பாலும் அரிதாகவே ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் ஒரு ரயில் நிலையத்தை அடைய 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் போதுமானது. எனினும் ராஜ்தானி, கரீப் ராத் அல்லது டொரான்டோ போன்ற நெடுந்தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அதிலும் குறிப்பாக இரவு நேரச் சேவைகளில் ஈடுபட்டுள்ள ரயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

இது மாதிரியான சூழ்நிலையில் லோகோ பைலட்டுகள் கண்ட்ரோல் ரூமில் தொடர்பு கொண்டு ரயில்வே டிராக்கில் ஒரு சில வினாடிகள் ரயிலை நிறுத்திவிட்டு, இயற்கையின் அழைப்பைப் பூர்த்தி செய்வார்கள். எனினும், முன்கூட்டியே அனுமதி இல்லாமல் ரயிலை அவர்களால் நிறுத்த முடியாது. ரயிலை நிறுத்துவதற்குக் கண்ட்ரோல் ரூமில் இருந்து தேவையான அங்கீகாரத்தைக் கட்டாயமாகப் பெற வேண்டும்