நாளை மறுநாள் பூமிக்கு திரும்புகிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா

நாளை மறுநாள் பூமிக்கு திரும்புகிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா

நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஆய்வுகளை முடித்து கொண்டு சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நால்வர் திங்கட்கிழமை பூமிக்கு திரும்புகின்றனர். அன்றைய தினம் மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். பின்னர் மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கும். சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு வருகிற 15-ந்தேதி பகல் சுமார் 3 மணி அளவில் பூமிக்கு திரும்புகின்றனர்