மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்கிய ரூ.5,886 கோடியில்

சென்னை: பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைத்த சாலைகள் எத்தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சி, இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில், பரிசல் போக்குவரத்து தடைபடுவதால், சுமார் 8 கி.மீ தொலைவுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது.

 

குறிப்பாக, அவசர மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல், பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பவானி ஆற்றைக் கடந்து செல்ல, உயர்மட்டப் பாலம் அமைத்துத் தரக் கோரி, பல ஆண்டுகளாக அம்மாபாளையம் கிராமப் பொதுமக்கள், முதல்வரிடமும், அந்தியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை.

 

தமிழகத்தின் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் 100 சதவீத சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறி வருகிறது.