PHH, AAY சர்க்கரை அட்டைகள்.. ஜூன் 30க்குள் ரேகை பதியாதோர் ரேஷன் கார்டு செல்லாதா? தமிழக அரசு விளக்கம்

PHH, AAY சர்க்கரை அட்டைகள்.. ஜூன் 30க்குள் ரேகை பதியாதோர் ரேஷன் கார்டு செல்லாதா? தமிழக அரசு விளக்கம்
சென்னை: ரேஷனில் நிலவும் முறைகேடுகளை தவிர்க்கவும், உரியவர்களுக்கு மட்டுமே ரேஷன் செல்வதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது..

தமிழகத்தில் மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அத்துடன் அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது. அந்தவகையில் கோடிக்கணக்கான ரேஷன்தாரர்கள் நேரடியாகவே பலனைப் பெற்று வருகிறார்கள்.

சென்னை: ரேஷனில் நிலவும் முறைகேடுகளை தவிர்க்கவும், உரியவர்களுக்கு மட்டுமே ரேஷன் செல்வதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.. இந்நிலையில, ரேஷன் கார்டுதாரர்கள், கேஒய்சி சரிபார்ப்பை ஜூன் 30-க்குள் முடித்திருக்க வேண்டும் என்றும், அப்படி முடிக்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும் என்றும் தஞ்சை மாவட்டத்தில் ஒரு செய்தி விரைந்து பரவி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து அரசு விளக்கம் ஒன்றை தந்துள்ளது..

எனினும், இலவச ரேஷன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே ரேஷன் உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதால்தான், கேஒய்சி சரிபார்க்கப்பட்டு வருகிறது.

வசதி படைத்தவர்கள்

அதுமட்டுமல்ல, ரேஷன் திட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்களாம்.. சிலர் போலி ஆவணங்களை வைத்து, ரேஷன் வாங்கி கொள்கிறார்களாம்.. மேலும் சில வசதியானவர்கள் கார்டுகளை வைத்து கொண்டு, ரேஷனும் வாங்குவதில்லையாம். இதனால் ரேஷன் மீதான நம்பகக்தன்மையும் மக்களிடம் குறையும் வாய்ப்புள்ளது..

எனவேதான், உண்மையான பயனாளர்களுக்கு ரேஷன் கிடைக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய முடிவு செய்துள்ளதுடன், கேஒய்சி சரிபார்ப்பை இதுவரையில் முடிக்காத பயனாளிகள் உடனே அதை செய்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் போலியான ரேஷன் கார்டுகள் இருந்தால் அவை உடனடியாக நீக்கப்படும்.