சார்ஜரை யூஸ் பண்ணிட்டு கழற்றும் பழக்கம் இல்லையா…? அப்படின்னா நீங்கதான் இத முதல்ல தெரிஞ்சுக்கணும்...!

உங்களுடைய போனின் சார்ஜ் முழுதாக நிறைந்த பிறகும்கூட சார்ஜரை சாக்கெட்டிற்குள் பிளக்-இன் செய்யும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இதனால் என்ன தீங்கு ஏற்படப் போகிறது என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால், இது குறித்து நீங்கள் மீண்டும் ஒருமுறை யோசித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
பொதுவாக நம்மில் பலருக்கு மொபைல் சார்ஜரை ஒருமுறை சாக்கெட்டிற்குள் நுழைத்துவிட்டால் அதனை மீண்டும் கழற்றும் பழக்கமே கிடையாது. நம்முடைய வேலையை எளிமையாக்குவதற்காக இந்த சிறிய வேலையை செய்ய நாம் தவற விடுகிறோம். ஆனால், நம்முடைய இந்த சோம்பேறித்தனம் வேறு சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்ப்போம்.
உங்களுடைய போனின் சார்ஜ் முழுதாக நிறைந்த பிறகும்கூட சார்ஜரை சாக்கெட்டிற்குள் பிளக்-இன் செய்யும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இதனால் என்ன தீங்கு ஏற்படப் போகிறது என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால், இது குறித்து நீங்கள் மீண்டும் ஒருமுறை யோசித்துப் பார்க்க வேண்டியது அவசியம். இப்படி சார்ஜரை நீங்கள் பயன்படுத்திய பிறகு கழற்றாமல் அப்படியே சாக்கெட்டிற்குள் வைத்திருக்கும் சமயத்தில் அதில் சிறிதளவு மின்சாரம் பாய்ந்து கொண்டே இருக்கும்
ஆற்றல் நிபுணர்களைப் பொறுத்தவரை, இந்த பழக்கமானது சிறு சிறு அளவுகளில் மின்சாரத்தை வீணாக்குவதற்கு வழிவகுக்கிறது என்று கூறுகின்றனர். உங்களுடைய போன் சார்ஜர் போனுடன் இணைக்கப்படாமல் இருக்கும்போது கூட சார்ஜரானது தொடர்ந்து மின்சாரத்தை பயன்படுத்தி வரும். இதற்கு சார்ஜரின் உட்புறத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் சர்க்யூட் ஆக்டிவாக இருப்பதே காரணம். இது ‘வாம்பயர் பவர்’ (Vampire Power) என்று அழைக்கப்படுகிறது