நீங்கள் ஒரு நாளுக்கு எந்த அளவு சாப்பிட வேண்டும்? உணவு நிபுணர்கள் அறிவுரை

நீங்கள் ஒரு நாளுக்கு எந்த அளவு சாப்பிட வேண்டும்? உணவு நிபுணர்கள் அறிவுரை
உணவகங்கள் எப்போதும் இருக்க வேண்டியதை விட அதிக அளவில் உணவைப் பரிமாறுகின்றன.

நாம் தட்டுகளில் உணவைப் பரிமாறும் அளவைப் பார்க்கும்போது, சராசரி உணவின் அளவு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

பெரும்பாலான மக்கள் தங்களுக்கேற்ற உணவின் அளவைப் பற்றி ஒரு தோராயமான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் உண்பதற்காக வைக்கப்படும் உணவின் அளவு உள்ளிட்ட பல காரணிகள், பெரிதும் தாக்கம் செலுத்துகின்றன.

உணவின் அளவு அதிகரிக்கும்போது மக்கள் அதிகமாக உண்ணும் போக்கு, "உணவு அளவின் விளைவு" (Portion Size Effect) என்று அறிவியல் ரீதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இதனை மையமாகக் கொண்டு பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களின் அபாயம்

மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிக அளவிலான உணவைச் சாப்பிடும்போது, அவர்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிக அளவு உட்கொண்டால், அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பசி மற்றும் ஆற்றல் சமநிலைப் பேராசிரியர் ஜேம்ஸ் ஸ்டப்ஸ் விளக்குகிறார்.