சீக்ரெட் யார்கிட்டையும் சொல்லாதீங்க... மீனவர்களின் ஃபேவரட் மீன் இதுதான் ?

வெளிர் வெள்ளை நிறத்தில், மெல்லிய நீளமான உடலமைப்பு, கீழ் தாடை நீண்ட கூர்மையான வாய் பகுதியுடன் இருக்கும் கரை ஊளி மீன். ஆங்கிலத்தில் "Banded Barracuda " மீன் என்றழைக்கப்படுகிறது
இந்தியப்பெருங்கடல் கடல் பகுதிகளை இவை அதிகமாக வாழ்கின்றன. வேட்டையாடி உண்ணும் குணம் கொண்டதால் சிறிய வகை மீன்கள், பூச்சிகள், இறால் குஞ்சுகள் போன்றை இவற்றின் உணவாக உள்ளது. கூட்டம் கூட்டமாக தான் வாழும். இரவு நேரத்தில் கடலுக்கு மேலை உணவைத் தேடி சுற்றித்திரியும். அப்போது மீனவர்கள் வலையில் சிக்கி கொள்ளும்.
தட்டுப்பாடு என்பது இல்லாமல் அனைத்து காலங்களிலும் எளிதில் கிடைக்கும். கரை ஊளியின் சுவை விலை மீன்களுக்கு ஈடாக இருப்பதால் மீனவர்கள் ஃபேவரைட் மீனாகவும் உள்ளது. கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை சில நேரங்களில் ரூ.400 என தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது
மருத்துவ குணங்கள்: ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் பக்கவாத அபாயம் மற்றும் இதய நோய் பாதிப்பில் இருந்து தடுக்கும். உடலில் உள்ள புண்களை ஆற்றும் தன்மை உடையதாக உள்ளது. நீரழிவு நோயை தடுக்கவும், பாதிப்பை குறைக்கவும் செய்யும்.
மூளை வளர்ச்சிக்கு உதவும், ரத்த கட்டிகள் உருவாவதை தடுக்கும். தோல் அழற்சி நோய் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் ஒருமுறை சாப்பிட்டால் அருமருந்தாகும். உடல் சோர்வடையாமல் இருக்க செய்யும்.
கால்சியம் இருப்பதால் எழும்பு மற்றும் பற்களை வலுவடையச் செய்யும். சருமத்திற்கும், முடி வளர்ச்சி அடையவும் இந்த மீன் சாப்பிடலாம். கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் உடல் பருமனை அடையாமல் தடுக்கும். குடல் புண்களை சரிசெய்யும்.
இந்த கரை ஊளி மீன் அதீத சுவையுடைய மீன் என்பதால் குழம்பு மற்றும் பொறித்து சாப்பிட என இரண்டிற்கும் நன்றாக இருக்கும். கரை ஊளி கருவாடாக மாற்றி குழம்பு வைத்து சாப்பிடவும் டேஸ்ட் நன்றாக இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.