முட்டை உடையாமல் வேக வைக்க கொதிக்கும் தண்ணீரில் இதை சேருங்க..!

முட்டை வேக வைக்கும்போது உடையாமல் இருக்க அறை வெப்பநிலை, உப்பு அல்லது வினிகர், மிதமான தீ, மற்றும் சரியான பதம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்
முட்டை வேக வைக்கும்போது பலரும் எதிர்கொள்ளும் சவால் அதை உடையாமல் வேக வைத்து எடுப்பதுதான். ஆனால் அதை எளிமையான சில வழிகள் மூலம் செய்யலாம். எப்படி என்பதை பார்க்கலாம்.
அறை வெப்பநிலை அவசியம் : சிலர் முட்டைகளை ஃபிரிட்ஜில் வைப்பார்கள். அப்படி வைக்கும் முட்டைகளை நேரடியாக தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும்போது உடையலாம். எனவே முட்டைகள் அறை வெப்பநிலைக்கு குளிர்வடைந்தபின் வேக வைத்தால் உடையாது.
உப்பு அல்லது வினிகர் : முட்டை கொதிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு அல்லது வினிகர் சேர்த்தால் முட்டை உடையாது
தண்ணீர் கொதிநிலை : முதலில் தண்ணீரை கொதிக்க விட்டு பின் முட்டைகளை போடுங்கள். திடீரென தண்ணீர் கொதிநிலையை அடையும்போது முட்டைகள் அதிர்வின் காரணமாக ஓடுகளில் விரிசல் விழலாம். எனவே கொதிநிலைக்கு வந்தபின் முட்டைகளை சேர்க்கவும்.
மிதமான தீ : வேகமான தீயில் அல்லாமல் மிதமான அளவில் அடுபின் தீயை வைப்பது முட்டை ஓடுகள் உடைவதை தடுக்க வழிவகுக்கும்.
மிதமான தீ : வேகமான தீயில் அல்லாமல் மிதமான அளவில் அடுபின் தீயை வைப்பது முட்டை ஓடுகள் உடைவதை தடுக்க வழிவகுக்கும்.
கவனம் தேவை : முட்டைகளை தண்ணீருக்குள் சேர்க்கும்போது ஒரு கரண்டி வைத்து மெதுவாக சேருங்கள். சட்டென முட்டையை சேர்க்கும்போது ஓடுகள் உடையக்கூடும்.
கவனம் தேவை : முட்டைகளை தண்ணீருக்குள் சேர்க்கும்போது ஒரு கரண்டி வைத்து மெதுவாக சேருங்கள். சட்டென முட்டையை சேர்க்கும்போது ஓடுகள் உடையக்கூடும்.
சரியான பதம் : முட்டை வேக அதிகபட்ச நேரம் 10 – 12 நிமிடங்களே ஆகும். எனவே அந்த நேரத்திற்குள் முட்டையை தேவைக்கு ஏற்ற பதத்தில் வேக வைத்து எடுப்பதால் ஓடுகள் உடைவதை தவிர்க்கலாம்.
குளிர்ந்த நீரில் போடவும் முட்டைகள் வெந்ததும், அவற்றை குளிர்ந்த நீரில் சேர்க்கவும். இதனால் முட்டை ஓடுகளை உரிக்க எளிதாக இருக்கும்.
முட்டை உடையாமல் வேக வைக்க கொதிக்கும் தண்ணீரில் இதை சேருங்க..