அரிசியை கழுவாமல் அப்படியே சமைத்தால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

அரிசியை கழுவாமல் அப்படியே சமைத்தால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!
அரிசியை சமைப்பதற்கு முன் நன்றாகக் கழுவ வேண்டும். இல்லையெனில், உடல்நலப் பிரச்சினைகள், சுவை மாற்றம், ஜீரணக் கடினம் போன்றவை ஏற்படும். 10 நிமிடங்கள் ஊற வைத்து சமைப்பது அவசியம்.

இந்திய உணவுகள் என்றாலே, அரிசி சாதம் இல்லாமல் முழுமையடையாது, வயிறு நிரம்பாது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளும் அரிசி சாதம் சமைக்கப்படுகிறது. அரிசியை சமைப்பதற்கு முன்பு அதை நன்றாக கழுவுவது நமது பழக்கம். ஆனால், அரிசியைக் கழுவாமல் சமைத்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..

பல அரிசி பாக்கெட்டுகளில் "சமைப்பதற்கு முன் கழுவ வேண்டும்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருமிகள் மற்றும் தூசியை அகற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவுவது போல, அரிசியையும் கழுவ வேண்டும். ஏனென்றால், பண்ணையிலிருந்து கடைக்கு அரிசி கொண்டு வரும்போது நிறைய அழுக்கு மற்றும் மணலுடன் கலந்திருக்கும். அதனால்தான் அதை சுத்தம் செய்ய வேண்டும்..

அரிசியைக் கழுவாமல் இருப்பதன் தீமைகள்: சுத்தமான தண்ணீரில் சரியாகக் கழுவாமல் அரிசியைச் சமைத்தால், சில உடல்நலப் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவை என்னவென்று பார்ப்போம்:

உடல்நலப் பிரச்சினைகள்: அரிசியில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் கிருமிகள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இவை தொடர்ந்து உடலில் நுழைந்தால், அவை பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தும். செரிமானப் பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படலாம்

சுவையில் வேறுபாடு: அரிசியைக் கழுவாமல் சமைத்தால், அரிசியின் சுவை மாறக்கூடும். சில நேரங்களில் சாதம் வித்தியாசமான வாசனை அல்லது கசப்பான சுவையுடன் கூட இருக்கலாம். இது சாப்பாட்டு அனுபவத்தை கெடுத்துவிடும்..

அரிசி ஈரமாக/ஒட்டும் தன்மையுடன் மாறுதல்: நீங்கள் அரிசியைக் கழுவாமல் சமைத்தால், அது அதிகமாக வேக நேரமெடுக்கும், ஈரமாக அல்லது மிகவும் ஒட்டும் தன்மையுடன் மாறும். இந்த வகையான அரிசி பார்ப்பதற்குக் கூட நன்றாக இருக்காது

ஜீரணிக்க கடினமாக இருக்கும்: கழுவாமல் அரிசியை சமைத்தால், அது சரியாக வேகாது, அல்லது சரியான பதத்தில் இருக்காது. இது ஜீரணிக்க கடினமாக இருக்கும்

எனவே, அரிசியை சமைப்பதற்கு முன் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவுவது மிகவும் முக்கியம். இது அரிசியின் சுவை மற்றும் தரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது

அரிசியை கழுவுவது மட்டுமல்லாது கழுவிய பின் 10 நிமிடங்களாவது ஊற வைத்து சமைப்பது அவசியம். அப்போதுதான் சாதம் சீக்கிரம் கெட்டுப்போகாது. பஞ்சு போல வெந்து வரும்