குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், குழந்தைகளுக்குச் சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோருக்குப் பெரும் சவாலாக உள்ளது. தாய்ப்பாலில் தொடங்கிக் குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறது சித்த மருத்துவம். குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை முழுமையாகத் தாய்ப்பால் கொடுப்பதைச் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழந்தை யின் வயதுக்கேற்பக் கஞ்சி போன்ற உணவு வகையை அறிமுகப்படுத்த வேண்டும். இதில் கேழ்வரகுக் கஞ்சி அல்லது பாசிப்பருப்புக் கஞ்சி போன்றவை உடலுக்கு மிகுந்த சக்தி தரும்.
இதன்மூலம் குழந்தைக்குத் தேவையான அளவில் கால்சியம் சத்து கிடைக்கிறது