ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்

****AGNISIRAGU****
Tamil Nadu govt loan : தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு வெளியாகியிருக்கும் முக்கிய அறிவிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பரான வாய்ப்பு. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இந்த தொழில் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ மூலம் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் கடன். பெண்கள்/ஆண்களுக்கான சுயஉதவி குழு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு ரூ.300.00 இலட்சம் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
****AGNISIRAGU****