சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஆக்கிரமிப்புகளுக்கு பெரிய செக்.. புதிய வெப்சைட்

****AGNISIRAGU****
பல நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன. இருக்கும் நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளுக்கும் பட்டா தர முடியாது என்று அரசு அறிவித்துவிட்டது. பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்துவிட்டது. எனவே எத்தனை வருடங்கள் ஆனாலும் நீர் நிலை ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் வெளியேற்றப்படுவது உறுதி என்பதே இதன் பொருள் ஆகும். அதேநேரம் தற்போதைய நிலையில் இருக்கும் நீர்நிலைகளை காக்க அரசு புதிய நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் மூலம் புதிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நீரின் தரத்தை கண்காணிக்க 3 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்புக்கான இணையதளம் ரூ.30 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
.மற்ற மாவட்டங்களில் இருக்கிறது என்றாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதி அளவிற்கு கிடையாது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலை, தாம்பரம், வரதராஜபுரம், கூடுவாஞ்சேரி, முடிச்சூர், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனாகாபுத்தூர், பரங்கிமலை, போரூர், பூந்தமல்லி என பல பகுதிகளில் நீர்நிலைகள் இன்றும் ஆக்கிரமிப்பில் உள்ளதை காண முடியும். இதில் பல பகுதிகள் பல ஆண்டுகளாகவே ஆக்கிரமிப்பில் உள்ளன.
மத்திய அரசின் ஒரு புள்ளி விவரப்படி ஆக்கிரமிப்பு மிக அதிகமாகக் கண்டறியப்பட்ட முதல் ஐந்து மாநிலங்கள் என்றால் உத்தரப் பிரதேசம் (15,213), தமிழ்நாடு (7,828), தெலங்கானா (2,748), ஆந்திரப் பிரதேசம் (2,733), மத்தியப் பிரதேசம் (1,765) ஆகியவை தான். இதில் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகமான ஆக்கிரமிப்பு என்பது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் தான் இருக்கிறது
சென்னை: செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் மூலம் புதிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நீரின் தரத்தை கண்காணிக்க புதிய இணையதளத்தை தமிழக அரசின் நீர்வளத்துறை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.இதன் மூலம் ஆக்கிரமிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்
****AGNISIRAGU****