அரசு ஊழியர்களை ஏமாற்றிய திமுக.. நாலரை வருஷம் ஆச்சு! 2026ல் ‘இவருக்கு’ தான் ஆதரவு.. ஜாக்டோ ஜியோ உறுதி

அரசு ஊழியர்களை ஏமாற்றிய திமுக.. நாலரை வருஷம் ஆச்சு! 2026ல் ‘இவருக்கு’ தான் ஆதரவு.. ஜாக்டோ ஜியோ உறுதி
நாலரை வருஷம் ஆச்சு! 2026ல் ‘இவருக்கு’ தான் ஆதரவு.. ஜாக்டோ ஜியோ உறுதி

திண்டுக்கல்: தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் அரசு ஊழியர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறி நாலரை வருடங்கள் ஆகிவிட்டது தற்போது வரை செய்யவில்லை எனவும், இன்னும் ஆறு மாதங்களே உள்ளது 2026 தேர்தலில் யார் எங்களுக்கு செய்து தருவோம் என்று எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேசம் முழுவதும் அமல்படுத்திட வேண்டும், ஓய்வூதியம் ஒழுங்காற்று முறை ஆணையத்தை PFRDA ரத்து செய்திட வேண்டும், தேசத்தின் எதிர்கால கல்வியை சீரழிக்கும் தேசத்தை கூறு போடும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ இந்திய அரசு திரும்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," பழைய ஓய்வூதிய திட்டத்தை தேசம் முழுவதும் அமல்படுத்திட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020 ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். அங்கன்வாடி சத்துணவு ஆசா போன்ற ஊழியர்களின் நிரந்தர ஊழியர்கள் ஆக்க வேண்டும். அவர்களுக்கான பணிக் கொடை மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதிப்படுத்த வேண்டும்.

தேச நலன் கருதி இந்தியன் ரயில்வே, சாலை போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம், பிற சுரங்கங்கள், துறைமுகம் கப்பல் துறை, பாதுகாப்பு, தபால் மின்சாரம், பெட்ரோலியம் தொலைதொடர்பு வங்கிகள் ,மற்றும் காப்பீட்டு துறை போன்றவற்றை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்

எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். அதற்கான நிதி அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை விலை குறியீட்டின் வழக்கமான திருத்தத்துடன் குறைந்தபட்ச உதயமாக 26 ஆயிரத்து உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இன்று அறிவிக்கப்பட்ட போராட்டம் தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் தமிழக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடுவோம் என கூறி தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. அரசு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைகளை இதுவரை எதையும் செய்யவில்லை. தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் 2026க்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. அதற்கு முன்பாக எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 2026 ஆட்சி கட்டிலில் எங்களுக்கு யார் குரல் கொடுக்கிறார்களோ? எங்களுக்கு யார் நல்லது செய்வதாக கூறுகிறார்களோ? அவர்களை முதல்வராக கொண்டு வருவோம்" என கூறினார்.