ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி - 3 பேர் மீது வழக்குப்பதிவு..

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி - 3 பேர் மீது வழக்குப்பதிவு..
ரெயில்வே துறையில் கிளெர்க்காக பணியாற்றி வருவதாக விஷால் நவாடே கூறியிருக்கிறார்...

மும்பை,

மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 3 பேர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தங்களுக்கு இந்திய ரெயில்வே துறையில் கிளெர்க், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட பணிகளை வாங்கி தருவதாக கூறி விஷால் நவாடே என்ற நபர் தங்களிடம் இருந்து ரூ.23 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தெரிவித்துள்ளனர்.

விஷால் நவாடே மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் போலி ஆவணங்களை காட்டி தங்களை ஏமாற்றியதாகவும், ரெயில்வேவில் வேலை வாங்கி தருவதாக கூறி தங்களிடம் இருந்து ரூ.23 லட்சம் பெற்று ஏமாற்றிவிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விஷால் நவாடே, ரெயில்வே துறையில் கிளெர்க்காக பணியாற்றி வருவதாக கூறியிருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் விஷால் நவாடே உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்