அறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது.. Thyrocare வேலுமணி-யின் முக்கியமான பதிவு..!!

தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.வேலுமணி சமுகவலைத்தளத்தில் அவ்வப்போது செய்யும் பதிவுகள் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானதாகவும், முக்கியமானதாகவும் விளங்கி வருகிறது. இந்த நிலையில் வேலுமணி அவர்கள் சமீபத்தில் செய்த ஒரு பதிவு இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
இன்றைய இளம் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகள் இந்த போட்டி மிகுந்த உலகில் சூப்பர்ஸ்டாராக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் பல வகையில் அவர்களை மெருகேற்றி வருகின்றனர். இத்தகைய முயற்சி சரியான திசையில் செல்கிறதா என்பதை வேலுமணி அவர்களின் பதிவு சுய பரிசோதனை செய்துக்கொள்ள உதவுகிறது என்று தான் சொல்ல வேண்டும்
வேலுமணி அவர்களின் பதிவில் பிள்ளைகளின் இன்டெலிஜென்ஸ் மற்றும் ஸ்டாமினா இடையேயான சமநிலை குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.
இன்டெலிஜென்ஸ் மற்றும் ஸ்டாமினாவின் சமநிலை: டாக்டர் வேலுமணியின் பதிவு, ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் இன்டெலிஜென்ஸ் மற்றும் ஸ்டாமினா எவ்வளவு முக்கியம் என்பதை விளக்குகிறது. ஒரு குழந்தை அதிகப்படியான இன்டெலிஜென்ஸ் இருந்தும் குறைவான ஸ்டாமினா இருந்தால் தங்கள் வாழ்க்கையை அவர்கள் சிரமப்படுவார்கள் (Suffers), அதேபோல அதிகப்படியான ஸ்டாமினா இருந்தும் குறைவான இன்டெலிஜென்ஸ் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து போராடி (survives) நடத்த முடியும் அளவுக்கான திறன்களை பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இரண்டும் அதிகமாக உள்ள குழந்தைகள் தலைமை (Leads) பொறுப்புகளை ஏற்று நடத்தும் அளவுக்கு திறன்களை பெற்று இருப்பார்கள். இன்டெலிஜென்ஸ் மற்றும் ஸ்டாமினா இரண்டும் குறைவாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைய வாய்ப்புகள் அதிகம் என தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் ஒரு புதிய பார்வையை தருகிறது.
ஸ்டாமினா: இதில் ஸ்டாமினா என்பது உங்கள் சக மாணவர்களையோ அல்லது நண்பர்களையோ விட வேலைகளை சிறப்பாகவும், வேகமாகவும் செய்யும் திறன் ஆகும். இதோடு, வேலை செய்யும் நேரத்தில் மிகவும் கவனமாக இருக்கும் தன்மையும், ஒழுக்கமாக இருப்பது மிகவும் முக்கியம். இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை வலுவாக்கும். பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரை: டாக்டர் வேலுமணி பெற்றோர்களுக்கு இந்த பதிவு மூலம் முக்கியமான அறிவுரையை கொடுத்துள்ளார். இதில் பிள்ளைகளின் இன்டெலிஜென்ஸை மட்டும் வளர்ப்பதை விட, டீனேஜ் வயது முடியும் முன்பு ஸ்டாமினாவையும் கட்டமைக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த ஸ்டாமினா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிள்ளைகளை வலுவாக்கி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள உதவும்.