1 ஏக்கர் நிலத்துக்கு 50% மானியம்.. அதைவிடுங்க, விவசாயிகளுக்கு உரத்துடன் பிற பொருளும் விற்பனை? அதிரடி..

சென்னை: விவசாயிகளின் நன்மைக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வருகிறது.. குறிப்பாக, வேளாண் இயந்திரங்களுக்கு அரசு தரப்பில் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.. இதைத்தவிர, பல்வேறு மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்குவது குறித்து முக்கிய அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது...
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், இவைகளை களைய, அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. விவசாயிகளின் நலனுக்காகவே, பல அறிவிப்புகள், சலுகைகளை அறிவித்து வருகிறது...
குறுவை சாகுபடி விவசாயிகள்
குறிப்பாக, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது...
அதன்படி, 100 சதவீத மானியத்தில் உரத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது.. குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கப்படுகிறது.. தமிழக அரசின் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டி.ஏ.பி. உரம் மற்றும் 25 கிலோ பொட்டாஷ் உரம் அடங்கிய உரத்தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்
இந்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில், விவசாயிகளுக்கு முழுவதும் மானியமாக ஒரு மூட்டை யூரியா, ஒரு முட்டை டி.ஏ.பி., அரை மூட்டை பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது.. இந்த திட்டத்தில் நிலவரம்பு ஒரு ஏக்கர் ஆகும்...
அதேபோல, சம்பா சாகுபடிக்கு நீண்டகால, மத்திய கால ரகங்கள் 300 டன் விதை நெல் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ள நிலையில், இதனையும் விவசாயிகள் 50 சதவித மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம்.
உளுந்து விதைகளுக்கு மானியம்
இதைத்தவிர விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுகிறது.. ஒவ்வொரு வருடமும், சம்பா நெல் அறுவடைக்கு பிறகு உளுந்து பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், குறைந்த காலத்தில் கூடுதல் வருமானத்தை ஈட்டமுடிகிறது..
எனவே, விதை மற்றும் உயிர் உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் நகல், நில ஆவண நகல்கள், சிட்டா, அடங்கல், போட்டோ உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து, உளுந்து விதை மற்றும் உயிர் உரங்களை 50 சதவீத மானியத்தில் பெற்று பயனடையலாம்...
இப்படி விவசாயிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை அரசு தந்து வருகிறது.. இப்படிப்பட்டட சூழலில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் உரத்துடன், இடு பொருட்கள் மற்றும் பிற ஆர்கானிக் உரங்கள், கரைசல்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்று விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் சமீபகாலமாகவே முளைத்து வருகின்றன.
மத்திய அரசு வார்னிங்
இந்த புகார்களை களையவே, மானிய விலையில் வழங்கப்படும் உரங்களுடன், விவசாயிகளை கட்டாயப்படுத்தி பிற இடுபொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று, உர உற்பத்தி நிறுவனம், இறக்குமதியாளர்கள், உர மொத்த விற்பனையாளர், சில்லரை விற்பனையாளர்களுக்கு, மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதமே வார்னிங் தந்திருந்தது..
ஆனாலும்கூட, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய உரங்களுடன், கட்டாயப்படுத்தி பிற பொருட்களை விற்பனை செய்யப்படுவது அதிகாரிகளின் கவனத்துக்கு வந்துள்ளது .. எனவேதான், மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் போது, கட்டாயப்படுத்தி பிற பொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உர விற்பனை நிலையங்களுக்கு அரசு தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இனி மிரட்டினால் சட்டம் பாயும்
இனிமேல் இப்படி செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது..
இது தொடர்பான சுற்றறிக்கையை, தமிழக வேளாண்மை இயக்குநர் முருகேஷ், உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பியிருக்கிறார்.. அரசின் இந்த நடவடிக்கையானது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது..