.10 கோடி பம்பர்.. சூடுபறக்கும் கேரள மான்சூன் லாட்டரி சேல்ஸ்.. யாருக்கு அடிக்க போகுதோ அதிர்ஷ்டம்

.10 கோடி பம்பர்.. சூடுபறக்கும் கேரள மான்சூன் லாட்டரி சேல்ஸ்.. யாருக்கு அடிக்க போகுதோ அதிர்ஷ்டம்
மான்சூன் லாட்டரி சேல்ஸ்.. யாருக்கு அடிக்க போகுதோ அதிர்ஷ்டம்?

திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் மான்சூன் பம்பர் லாட்டரி சேல்ஸ் சூடுபிடித்துள்ளது. ரூ. 10 கோடி முதல் பரிசு கொண்ட இந்த லாட்டரியின் சேல்ஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 23 ஆம் தேதி ரூ.250. விலை கொண்ட இந்த டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற இருக்கிறது. இதனால் யாருக்கு முதல் பரிசு விழப்போகுதோ என கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த பம்பரில் இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம் (5 பேருக்கு), 3 வது பரிசாக 5 லட்சமும், 4-வது பரிசாக ரூ.3 லட்சம் (ஐந்து பேருக்கும்) அளிக்கப்படுகிறது.

கேரளாவில் வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெறுகிறது. ஓணம் பம்பர், பூஜா பம்பர், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர் என ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. இநத டிக்கெட்டுகளுக்கு பல கோடி ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படுவதால் கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இந்த பம்பர் குலுக்கலுக்கு இருக்கும்

பம்பர் லாட்டரி விற்பனை

முதல் பரிசுஅடித்தால் கனவில் கூட நினைத்து பாராத திருப்பம் வாழ்வில் ஏற்பட்டு விடும் என நினைத்து பலரும் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளையும் வாங்குவதையும் பார்க்க முடியும். தற்போது கேரளாவில் மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. குலுக்கலுக்கு சற்றேறக்குறைய இன்னும் ஒருவாரமே இருப்பதால் அங்கு மான்சூன் டிக்கெட்டின் விற்பனை சூடுபறக்கிறது

.

இந்த டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். ஐந்து சீரிஸ்களில் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முதல் பரிசாக ரூ. 10 கோடியும், இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம் (5 பேருக்கு) , 3 வது பரிசாக 5 லட்சமும் அளிக்கப்படுகிறது. 4-வது பரிசாக ரூ.3 லட்சம் ஐந்து பேருக்கும் அளிக்கப்படுகிறது. டிக்கெட் விற்பனையில் வழக்கம் போல பாலக்காடு மாவட்டமே டாப்பில் உள்ளதாக கேரள லாட்டரி விற்பனையாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

விஷு பம்பர் குலுக்கல் வின்னர்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலும் டிக்கெட் விற்பனை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் தற்போது பருவமழை காலம் என்பதால் கடந்த பம்பர் டிக்கெட்டை விட விற்பனை சற்று மந்தமாக இருக்கிறது எனவும், எனினும், கடைசி நாட்களில் விற்பனை வேகமெடுக்க வாய்ப்புள்ளதாக லாட்டரி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் நடைபெற்ற விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலில் முதல் பரிசாக ரூ. 12 கோடி அடித்தது. விடி 204266 என்ற எண்ணிற்கு இந்த பரிசு அடித்தது. பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் வெளியாகவில்லை. ரகசியமாக வாங்கி சென்றுவிட்டாரா? அல்லது பரிசுத்தொகை உரிமை கோராமல் உள்ளதா என்பது பற்றிய தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

தினமும் ரூ. 1 கோடி முதல் பரிசு

கேரளாவில் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் மட்டும் இன்றி அங்கு தினம் தோறும் குலுக்கல் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற பாக்யதாரா லாட்டரி குலுக்கலில் முதல் பரிசாக ரூ 1 கோடி . BE 220046 என்ற எண்ணிற்கு அடித்தது. கண்ணூரில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் இதுவாகும்

இரண்டாவது பரிசாக BJ 736517 என்ற எண்ணிற்கு ரூ30 லட்சம் பரிசு அடித்தது. லாட்டரி டிக்கெட்டுகள் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, கேரளா உள்ளிட்ட எந்த ஒரு மாநில லாட்டரி டிக்கெட்டுகளையும் தமிழகத்தில் விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும். கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளுக்கு பரிசு விழுந்தால் கூட கேரள அரசு வழங்க மறுக்கும்