அமெரிக்காவில் நடக்க போகும்.. முக்கிய சம்பவம்..

அமெரிக்காவில் நடக்க போகும்.. முக்கிய சம்பவம்..
அமெரிக்காவில் நடக்க போகும்.. முக்கிய சம்பவம்.. இது மட்டும் மாறினால்.. தங்கம் விலை தலைகீழாக ஆகும்

சென்னை: எம் கே வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை, தங்கம் விலை குறித்த கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து உள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் மாற்றப்படும் பட்சத்தில் தங்கத்தின் விலையில் கடுமையான மாற்றமும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்தால் தங்கம் விலை குறையும், வட்டி விகிதம் குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். பொதுவாக அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைந்தால்.. உடனே அங்கே டாலர் மதிப்பு குறையும். அப்படி டாலர் மதிப்பு குறைந்தால் உடனே தங்கத்தின் மதிப்பு உயரும். அந்த வகையில் எம் கே வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம், அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்து உள்ளது. அப்படி குறையும் பட்சத்தில் தங்கத்தின் விலை பலமடங்கு உயரும் வாய்ப்புகள் உள்ளன. இப்போது அங்கே வட்டி விகிதம் 4.50 சதவிகிதமாக உள்ளது. கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக இது மாற்றப்படவில்லை.

Goldman Sachs கணிப்பின்படி, மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்முதல் காரணமாக, 2025 இறுதிக்குள் தங்கத்தின் விலை $3,700/toz ஆகவும், 2026 நடுப்பகுதியில் $4,000 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Bank of America அடுத்த 12 மாதங்களில் தங்கம் $4,000/oz வரை உயரும் என்று கணித்துள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10,151 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,305 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,660 ஆகவும் உள்ளது.

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,900 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,075 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,480 ஆகவும் உள்ளது. இந்தியாவில் தங்கம் விலை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, 10 கிராம் தங்கத்தின் விலை ₹1,00,000 என்ற இலக்கை நோக்கி நகர வாய்ப்புள்ளது. தற்போது, தங்கத்தின் விலை ₹96,500 - ₹98,500 என்ற அளவில் உள்ளது.

ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, உள்ளூர் தங்கம் விலைகள் தொடர்ந்து அதிகரித்து, குறுகிய காலத்தில் 10 கிராமுக்கு ₹96,500 முதல் ₹98,500 வரை வர்த்தகமாகி, 2025 இரண்டாம் பாதியில் ₹98,500 முதல் ₹1,00,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று கூறப்பட்டுள்ளது

சமீபத்தில் உலகளாவிய விலைகள் குறைந்தாலும், உள்நாட்டுத் தங்கம் விலைகள் ஜூன் மாதத்தில் 0.6% உயர்ந்தன. இதற்கு ரூபாய் மதிப்பு 0.2% பலவீனமடைந்தது காரணமாக. ஆனால் மே மாதத்தில் இறக்குமதி $2.5 பில்லியனாகக் குறைந்துள்ளது, இது ஏப்ரல் மாதத்தில் $3.1 பில்லியனாக இருந்தது. நகைக்கான தேவை பலவீனமாகவே உள்ளது, அதே நேரத்தில் முதலீடு தொடர்பான கொள்முதல் வலுவாக இருந்தது. அதாவது மக்கள் இதை அணிகலனாக வாங்குவது குறைவாக உள்ளது. ஆனால் முதலீடாக அதாவது பார்களாக வாங்குவது அதிகரித்துள்

இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சங்கத்தின் (AMFI) தரவுகளின்படி, மே மாதத்தில் தங்க ETF-களில் நிகர உள்வரவு ₹2.92 பில்லியனாக இருந்தத. உலக அளவிலும், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் வலுவாக உள்ளது. SPDR தங்க ETF கையிருப்பு ஜூன் 1 ஆம் தேதி 930 டன்களில் இருந்து ஜூலை 1 ஆம் தேதி 948 டன்களாக உயர்ந்தது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.