ரூ. 10,000 முதலீடு... லட்சங்களில் வருமானம்... இந்திய அஞ்சல்துறையின் சூப்பர் அறிவிப்பு

ரூ. 10,000 முதலீடு... லட்சங்களில் வருமானம்... இந்திய அஞ்சல்துறையின் சூப்பர் அறிவிப்பு
ராமநாதபுரத்தில் அஞ்சலகங்கள் இல்லாத இடங்களில் தனியார் அஞ்சலகங்கள் அமைத்திட விண்ணப்பிக்கலாம்,

ராமநாதபுரத்தில் அஞ்சலகங்கள்

இல்லாத இடங்களில் தனியார் அஞ்சலகங்கள் அமைத்திட விண்ணப்பிக்கலாம், தொழில் இல்லாமல், தொழில் தொடங்க நினைக்கும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

இந்திய அஞ்சல்துறை என்பது 154,000க்கும் அதிகமான அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும். இதில் கிராமப்புறங்களில் மட்டும் 1.5 லட்சம் அஞ்சலகங்களுடன் விரிவான சேவையை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது.

இன்று பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டாலும், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் ஆதிக்க செலுத்தி வந்தாலும், அஞ்சல் சேவைக்கான தேவை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இதன் காரணமாக, தனியார் நிறுவனங்கள் மூலம் அஞ்சல் சேவைகளை வழங்குவதற்கான திட்டத்தினை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது.

அஞ்சல் சேவையில் ஈடுபடுவதற்காக உரிமம் பெற்ற நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆர்வமுடைய, தகுதியுடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அஞ்சல்துறையின் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அஞ்சல் சேவையினை விரிவுபடுத்தவும், வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தவும், புதுப்பிக்கப்பட்ட உரிமையாளர் திட்டத்தின் கீழ் அஞ்சலக பிரான்சிஸ் அவுட்லெடானது அஞ்சல் அலுவலகங்கள் குறைவாக உள்ள இடத்தில் அமைக்க அஞ்சல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், பணவிடை (sale of stamps, booking of Speed Post, Registered Post, Money orders and Various retail services) ஆகியவற்றை பதிவு செய்தல் மற்றும் பல்வேறு சிறுவகை சேவைகள் உட்பட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.

நிறுவனங்களை நடத்துவதற்கு உகந்த இடங்களை வைத்துள்ள இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் சேவை நடவடிக்கைகளின் அடிப்படை களை அறிந்த தேவையான உள்கட்டமைப்புக்கு முதலீடு செய்ய தயாராக உள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். 10ம் வகுப்பு கல்வி தேர்ச்சியும், ரூ.10,000 பாதுகாப்பு வைப்புத்தொகையை மட்டுமே செலுத்த வேண்டும்

 ஒவ்வொரு பதிவு தபாலுக்கும் ரூ.3.00 கமிஷனாக வழங்கப்படும். ரூ.200/-க்கு மேல் மதிப்புள்ள ஒவ்வொரு மணி ஆர்டருக்கும் ரூ.5.00 கமிஷன் வழங்கப்படும். அஞ்சல் தலைகளுக்கு 5% கமிஷன் வழங்கப்படும். மாதாந்திர விரைவு தபால் சேவையில் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 7% முதல் 25% வரை கமிஷனாக பெறலாம். குறைந்தது 300 வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொண்டால் கூட மாதம் ரூ.5 லட்சம் வரைக்கும் வருமானம் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு பதிவு தபாலுக்கும் ரூ.3.00 கமிஷனாக வழங்கப்படும். ரூ.200/-க்கு மேல் மதிப்புள்ள ஒவ்வொரு மணி ஆர்டருக்கும் ரூ.5.00 கமிஷன் வழங்கப்படும். அஞ்சல் தலைகளுக்கு 5% கமிஷன் வழங்கப்படும். மாதாந்திர விரைவு தபால் சேவையில் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 7% முதல் 25% வரை கமிஷனாக பெறலாம். குறைந்தது 300 வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொண்டால் கூட மாதம் ரூ.5 லட்சம் வரைக்கும் வருமானம் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

 ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சல் துறை அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை அருகில் உள்ள கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://utilities.cept.gov.in/DOP/ViewUploads.aspx?uid=10- ன் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் : 31.07.2025

ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சல் துறை அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை அருகில் உள்ள கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.