களமிறங்கிய டீபாண்டி பஜார் பக்கம் போறீங்களா? பைக்கில் இனி செல்வது கஷ்டம்.. வந்தது புதிய ரூல்! ...

சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் சார்பாக பாண்டி பஜாரில் நிறுத்தப்பட்டு இருக்கும் பைக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன. நடைபாதையில் பார்க் செய்யப்படும் பைக்குகள் அகற்றப்படும் பணிகள் இனி தினசரி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதோடு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் சார்பாக தி நகரில் தெருக்களில் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு ₹75 முதல் ₹100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தி நகர் பகுதியில் போக்குவரத்தை குறைக்க வரி, கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே அங்கே உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கான.. MLCP பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கே மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டணம் வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதை மக்கள் பயன்படுத்தாமல் சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர்
கார் பார்க்கிங் கட்டணம்
இது போக சென்னையில் சாலை ஓரங்களில் பார்க் செய்யப்படும் வாகனங்களை கண்காணிக்க எக்ஸ் ஃபோர்ஸ் படைகளை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் தவறான நிர்வாகம் என்ற பல புகார்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தற்போது தமிழ்நாடு முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் "எக்ஸ் போர்ஸ்" படையை களமிறக்கி உள்ளது
.சென்னையில் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட தெரு பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை களமிறக்கி உள்ளது. இப்போது பார்க்கிங்கின் நிர்வாகத்தை சிவில் அமைப்பே நேரடியாகக் கையாண்டு வருகிறது. இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 மற்றும் காருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இதில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுவதால் முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் படையை தமிழ்நாடு அரசு இங்கே களமிறக்கி உள்ளது. பார்க்கிங் மாற்றம்: சென்னையில் பல இடங்களில் சாலைகளில் வாகனங்களை பார்க்கும் செய்யும் வழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் எந்த இடத்தில் யார் பார்க் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளத. இந்த புதிய பிரசச்னையை தீர்க்க புது பார்க்கிங் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது