கார் விபத்தில் தன் நினைவுகளை இழந்து 2001ஆம் ஆண்டுக்கே திரும்பிச் சென்ற மருத்துவர்

கார் விபத்தில் தன் நினைவுகளை இழந்து 2001ஆம் ஆண்டுக்கே திரும்பிச் சென்ற மருத்துவர்
மருத்துவர் பியர்தான்டே பிச்சோனி

விருப்பமில்லாமல் ஒரு டைம் டிராவலராக மாறியவர்தான் மருத்துவர் பியர்தான்டே பிச்சோனி.

கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் அவரது மூளையில் காயம் ஏற்பட்டது. அதன் விளைவாக, அதற்கு முந்தைய 12 ஆண்டு கால நினைவுகள் பியர்தான்டேவின் நினைவில் இருந்து முற்றிலும் அழிந்துவிட்டன.

மறுநாள் மருத்துவமனையில் கண் விழித்தபோது, அது 2001ஆம் ஆண்டு என்று அவர் நினைத்தார். தனது மனைவியையோ, இளைஞர்களாக வளர்ந்துவிட்ட தனது மகன்களையோ பியர்தான்டேவால் அடையாளம் காண முடியவில்லை.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு, இனி தன்னால் மருத்துவம் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்த பியர்தான்டே, தனது பழைய வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயன்றார் (அவருக்கு நெருக்கமானவர்களால் 'பியர்' என்று அவர் அழைக்கப்படுகிறார்).

ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தபோது, தனக்கு ஓர் இருண்ட பக்கம் இருப்பதை பியர் கண்டறிந்தார்.