மூத்த கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

மூத்த கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
வசந்தி தேவி

சென்னை: கல்​வித் துறை​யில் பல்​வேறு சீர்​திருத்​தங்​களில் ஈடு​பட்ட மூத்த கல்​வி​யாள​ரும், முன்​னாள் துணைவேந்​தரு​மான வே.வசந்​தி தேவி சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 87. வசந்தி தேவி 1938-ம் ஆண்​டில் திண்​டுக்​கல்​லில் பிறந்தார். ராணி மேரி கல்​லூரி​யில் பேராசிரியை பணி​யில் சேர்ந்த அவர், 1988 முதல் 1990-ம் ஆண்டு வரை கும்​பகோணத்​தில் உள்ள அரசு மகளிர் கல்​லூரி​யின் முதல்​வ​ராக பணி​யாற்​றி​னார்.

1992 முதல் 1998-ம் ஆண்டு வரை இவர் மனோன்​மணீ​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழக துணைவேந்​த​ராக பணி​யாற்​றி​னார். அதன்பின் 2002 முதல் 2005 ம் ஆண்டு வரை தமிழகத்​தின் மாநில மகளிர் ஆணை​யத்​தின் தலை​வ​ராக​வும் இருந்​தார். குறிப்​பாக 1980-களின் இறு​தி​யில் உசிலம்​பட்டி பெண் சிசுக்​கொலைகளை, களத்​துக்​குச் சென்று தரவு​களோடு ஆவணப்​படுத்​தி​னார்.

பணி ஒய்​வுக்கு பின்​னர் கற்​றல் நலனுக்​கான பள்​ளிக்​கல்வி பாது​காப்பு இயக்​கத்தை தொடங்கி தொடர்ந்து சேவை​யாற்றி வந்தார். தமிழக அரசு உரு​வாக்கி உள்ள பள்ளி மேலாண்​மைக் குழு​விலும் பங்​களித்​திருக்​கிறார். இதுத​விர வசந்தி தேவி 2016-ம் ஆண்டு ஆர்​.கே.நகரில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தாவை எதிர்த்து விசிக சார்​பில் போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தார். பல்​வேறு கல்வி மற்​றும் மகளிர் மேம்​பாட்டு திட்​டங்​களுக்கு காரண​மாக இருந்​தவர்.

அதே​போல், துணைவேந்​த​ராக பணி​யாற்​றுகை​யில் பல்​கலைக்​கழகத்​தில் சமூகக் கல்​வியைப் பாடத்​திட்​டத்​தின் ஒரு பகுதியாக்கி​னார். அவர் கொண்​டு​வந்த முக்​கிய​மான திட்​டங்​களில் ஒன்று கிராமப்​புறப் பெண்​களுக்கு சைக்​கிள் பயிற்சி அளிக்கும் திட்​டம் மிக​வும் வரவேற்பை பெற்​றது.

.

சென்னை வேளச்​சேரி​யில் வசித்​து​வந்த அவருக்கு நேற்று மதி​யம் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு மரணமடைந்​தார். அவரது உடல், பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக அவரது இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து வசந்​திதே​வி​யின் விருப்​பப்​படி அவரின் உடல் கேஎம்சி மருத்​து​வ​மனைக்கு இன்று காலை தான​மாக வழங்​கப்பட உள்​ளது.

வசந்தி தேவி மறைவு தொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில், “மூத்த கல்​வி​யாள​ரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்​தி​யறிந்து மிகுந்த வேதனை அடைந்​தேன். மாநில திட்​டக் குழு உறுப்​பினர் உள்பட பல்​வேறு உயர் பொறுப்​பு​களில் சிறந்த பங்​களிப்பை வழங்​கியதுடன், சமூகத்​தின் மீதும் பெரும் அக்​கறை கொண்​ட​வ​ராக வசந்தி தேவி திகழ்ந்​தார். அனை​வருக்​கும் சமச்​சீ​ரான கல்வி கிடைக்க இறு​தி​மூச்சு வரை போராடிய​வர்.

கல்வி மீண்​டும் மாநிலப் பட்​டியலில் சேர்க்​கப்பட வேண்​டு மென தொடர்ந்து வலி​யுறுத்​தி​னார். அவரது திடீர் மறைவு கல்வித்துறை மற்​றும் மனித உரிமைச் செயற்​பாட்​டுக் களத்​தில் ஈடு​செய்ய முடி​யாத இழப்​பாகும். இவ்​வாறு கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் உள்​ளிட்ட அரசி​யல்​ தலை​வர்​கள்​ இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.